சுஜாதா மூர்த்திக்குப் பதவி உயர்வு
யுனிவர்சல் மியூசிக் என்டர்ப்ரைசஸ் (பிரபல யுனிவர்சல் மியூசிக் குரூப்பின் ஒரு பிரிவு) நிறுவனம் சுஜாதா மூர்த்தி அவர்களை முதுநிலை உபதலைவர் (பொதுமக்கள் தொடர்பு) பதவிக்கு உயர்த்தி இருப்பதாக அதன் பொது மேலாளர் மைக் டேவிஸ் அறிவித்திருக்கிறார். நிர்வாணா, பாப் மார்லி, எல்டன் ஜான் போன்ற பிரபல இசைக் கலைஞர்/குழுக்களின் வெளியீடுகளுக்கான மக்கள் தொடர்புக்கு இவர் பொறுப்பேற்பார். 'இது ஒரு முக்கியமான பதவி; சுஜாதாவின் சாதனைகள் அவருக்கு இந்தப் பதவியைப் பெற்றுத் தந்துள்ளன' என்கிறார் டேவிஸ். சென்னையைச் சேர்ந்த சுஜாதா லாஸ் ஏஞ்சலஸ், ஹூஸ்டன் ஆகிய இடங்களில் வளர்ந்தார். ஆஸ்டினில் உள்ள டெக்ஸாஸ் பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்றார்.

UMe செய்திக் குறிப்பிலிருந்து.

© TamilOnline.com