ரம்பா ரொம்ப வம்பா
'கியான் கீ ஜோத் நகின் போல்தா' படம் மும்பையில் ஹிட் ஆகியிருக்கிறது. சுஷ்மிதா சென், கோவிந்தா ஆகியோருடன் நம்ம ரம்பாவும் நடித்திருக்கிறார். ரம்பாவின் ரிடயர்மெண்ட் நேரத்தில் இந்தியில் இப்படியொரு ஹிட் கிடைத்திருக்கிறது ரம்பாவுக்கு. பிரதி உபகாரமாக படத்தை இயக்கிய டேவிட் தவானின் அன்புக்குப் பாத்திரமாகியிருக்கிறார் ரம்பா. மும்பையில் அவருடைய மொபைல் போனுக்குப் பேசினால் ரம்பா எடுத்துப் பேசுகிறாராம். அந்த அளவுக்கு அவர்களின் நெருக்கம். மும்பை பத்திரிகையாளர்களைக் கேட்டால் தமிழ் இண்டஸ்ட்ரியில் இன்னும் இந்த விஷயமே தெரியாதா என்று இளிச்சவாயன் போல பார்க்கிறார்கள்.

தமிழ்மகன்

© TamilOnline.com