பண்ணாரி அம்மனாக விஜயசாந்தி
'அம்மன் கோயில் வாசலிலே', 'விவசாயி மகன்', 'அசத்தல்' போன்ற பல படங்களைத் தயாரித்த மகாலட்சுமி புரொடக்ஷன்ஸ் எஸ். ராஜராம் தயாரிக்கும் அடுத்த படம், 'பண்ணாரி அம்மன்'.

இதில் விஜயசாந்தி அம்மன் வேடம் ஏற்று நடிக்கிறார். கோவை மாவட்டத்தில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட கதை என்பதால், கோவைத் தமிழ்ப்பேசி நடிக்கிறார் விஜயசாந்தி. குடும்பப் பாங்கான படம். காதல் படம், ஆக்ஷன் படங்களில் நடித்து மக்கள் மனதில் ஹீரோ போல இடம் பிடித்த இவர் அம்மன் வேடத்தில் நடிப்பது இதுவே முதல்முறையாகும்.

இப்படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் எஸ். பாரதி கண்ணன். 'கண்ணாத்தாள்', 'திருநெல்வேலி', 'ராஜ ராஜேஸ்வரி' போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய இவர் இயக்கும் நான்காவது படம் இது.

விஜயசாந்தியுடன் தெலுங்கு முன்னணி இளம் நட்சத்திரமான லயா இப்படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகிறார். மேலும் குஷ்பு, வடிவேல், வினுச்சக்கரவர்த்தி, டெல்லி கணேஷ், தியாகு மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

இப்படத்திற்கு பாடல்கள் எழுதி இசையமைக்கிறார் டி.ராஜேந்தர்.

தமிழ்மகன்

© TamilOnline.com