தீபாவளி மருந்து
தேவையான பொருட்கள்

சுக்கு - 25 கிராம்
மிளகு - 25 கிராம்
திப்பிலி - 25 கிராம்
கொத்துமல்லி - 25 கிராம்
லவங்கப்பட்டை - 10 கிராம்
ஏலக்காய் - 10 கிராம்
விடங்கம் - 25 கிராம்
சீரகம் - 25 கிராம்
நாககேசரம் - 25 கிராம்
வெல்லம் - 100 கிராம்
காய்ந்த துளசி - ஒரு கைப்பிடியளவு
தேன் - 2 டீஸ்பூன்
நெய் - 1 டீஸ்பூன்

செய்முறை

ஒரு வாணலியை அடுப்பில் வைத்துத் தனித் தனியே ஒவ்வொன்றாக வறுத்துக் கொள்ள வேண்டும்.

எல்லாவற்றையும் மிக்ஸியில் ஒன்றாகக் கலந்து போட்டுப் பொடியாக்கிக் கொள்ள வேண்டும்.

வெல்லத்தைத் தண்ணீரில் கரைத்துக் கொண்டு பொடியாக்கப்பட்ட மருந்துப் பொருள்களையும், அதில் சேர்த்துக் கரைத்துக் கொண்டு அடுப்பில் வைத்து லேசாகச் சுட வைக்க வேண்டும்.

நன்றகாச் சூடாகிக் கொதித்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கி வைத்துத் தேனும், நெய்யும் கலந்து விட்டால் தீபாவளி மருந்து தயாராகிவிடும்.

இந்த மருந்தை தீபாவளி சமயத்தில் மட்டுமல்லாமல், சாதாரணமாக எப்போது வேண்டுமானாலும் தயாரித்து வைத்துக் கொண்டு அஜீரணம் ஏற்படும் போதெல்லாம் சாப்பிடலாம். உடலுக்கு மிகவும் நல்லது.

ஐந்து வயது வரையுள்ள குழந்தைகளுக்கு தினமும் அரை டீஸ்பூன் அளவு கொடுத்து வரலாம்.

5 முதல் 10 வயது வரையுள்ளவர்களுக்கு 1 டீஸ்பூன் கொடுக்கலாம். இதனால் ஜீரண சக்தி அதிகமாகி நல்ல பசி எடுக்க உதவும். இதை வீட்டில் தயாரித்து வைத்துக் கொண்டால் நீண்ட காலத்துக்குக் கெடாமல் இருக்கும்.

சரஸ்வதி தியாகராஜன்

© TamilOnline.com