மைக்ரோவேவ் பால்கோவா
தேவையான பொருட்கள்

காய்ச்சி கெட்டிப்படுத்தப்பட்ட, சர்க்கரை சேர்த்த பால் (கன்டென்ஸ்டு மில்க்) - 1 கேன்
பால் பவுடர் - 1 கிண்ணம்
வெண்ணெய் - 1/2 கிண்ணம்
ஏலக்காய் பவுடர் - 1/2 டேபிள் ஸ்பூன்

செய்முறை

மைக்ரோவேவ் சமையலுக்கான பிரத்தியேக பாத்திரத்தில் வெண்ணெயைக் கொதிக்க வைக்கவும். கொதிநிலையில் வெளியே எடுத்து பால் பவுடர் சேர்த்து கலக்கவும். அதனுடன் கன்டென்ஸ்டு பால் சேர்த்துக் கொள்ளவும். நன்கு கலக்கிய பிறகு மைக்ரோவேவ் அடுப்பில் வைத்து 4-6 நிமிடங்களுக்கு சமைக்கவும். இரண்டு நிமிடங்களுக்கு ஒரு முறை வெளியே எடுத்து கலக்கி விடுவது நல்லது. குமிழிகள் தோன்றும் போது வெளியே எடுத்து ஆற விடுங்கள். பின்னர் ஏலக்காய் பவுடர் சேர்த்து நன்கு கலக்கவும். தயாரான பால்கோவாவை சிறு சிறு உருண்டைகளாக்கி நடுவில் முந்திரிப் பருப்பு சொருகலாம் அல்லது உங்களுக்கு விருப்பமான வகையில் அலங்கரிக்கலாம்.

சரஸ்வதி தியாகராஜன்

© TamilOnline.com