அக்டோபர் 2007: குறுக்கெழுத்துப் புதிர்
குறுக்காக

3. அந்த இடத்தில் மாடு வாங்கு, தலையே போனாலும் (3)
5. ஏகலைவனின் குணம் வாய்க்க, சக்தி குறைவதற்கு முன் கலக்கிப் பருகு (2,3)
6. பெற்றால் வேறிடம் செல்லவேண்டியதுதான் (2)
7. மனிதன் சூழப் பாயும் இடையே வாழ்நாள் (3)
8. திமிர் பிடித்தவள் ஒரு வள்ளல் முன்பாகக் குறைவான அங்கம் குலுக்கி வந்தாள் (5)
11. நிஷத மன்ன! ஒரு பகுதி சமையல் பிரமாதம் (5)
12. பக்தரின் பாரத்தை ஏற்றுக் கொள்பவனே, முருகா, வடிவேலா! (3)
14. அவை வடநாட்டில் இப்படி அழைக்கப்படும் (2)
16. நன்மதிப்பைப் பெறும் போக்கினால் நயனத்தாள் நயனம் பாதி பெற்றாள் (5)
17. கதரைக் கழற்றிய காந்தி விதையில் ஊன்றிய அதிசயம் (3)

நெடுக்காக

1. பொருத்தமான குந்தவையுள்ளத்தில் நாலெழுத்து தேவையின்றிக் குழப்பும் (6)
2. ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம் (3)
3. மற்றவரைப் பணிய வைக்கும் நிலைக்கு வாய் தடுமாற வெளியே உடன்பாடு (5)
4. கேழ்வரகு விதைகளை ஓரிடத்தில் திரட்டு (2)
9. காரம், புலவர் வால் நறுக்கிக் கெடு (2,4)
10. ஓர் அரசியல் விமர்சகர் வாயால் வெளிக்கொணர அதை ஓரளவு கேட்டாலே கண்ணீர் வரும் (5)
13. தைப்பதற்கு முன் சட்டை அளவு சிறிதாக இருந்தாலும் மனதில் தைரியம் (3)
15. செய்யுள் விரிவுரையாளரை முதலில் யாழ்ப்பாணத்தில் பயன்படுத்து (2)

புதிர் விடைகள் அடுத்த மாத (நவம்பர் 2007) இதழில் வெளிவரும்.

வாஞ்சிநாதன்
vanchinathan@gmail.com

நேரமும் சக்தியும்

பிஸினஸ் ஸ்டாண்டர்டு என்ற ஆங்கில நாளேட்டில் வெளிவந்த எனக்குப் புரியாத (அநேகமாக எல்லாமும்தான்) புதிரில் இது ஒன்று.

Top scientist converting time into energy (7)

கணிதம்தான் நான் படித்தது என்றாலும் நான் பணி செய்யுமிடத்தில் இயற்பியலை (பௌதிகம்) ஆய்வு செய்பவர்கள் பேசிக் கொள்வது அவ்வப்போது என் காதில் விழ்ந்து கொண்டிருப்பதால் இதை என்னால் தீர்த்துவிட முடியும் என்று நினைத்தேன். ஐன்ஸ்டைன், பொருள் ஆற்றலாக மாறும்போது பெரிதாகக் கூறப்படும் பிரபலமான E=mc2 சமன்பாட்டையெல்லாம் யோசித்துப் பார்த்தேன். இறுதிவரை முடியவேயில்லை. பின்னர் அறிவியலே அறியாத நண்பரொருவர் விடையைக் கூறினார் Chemise (= chemist என்பதிலுள்ள நேரத்தைக் குறிக்கும் tயை e என மாற்றவேண்டுமாம்) டாப் என்பது ஆடையையும் குறிக்கும் என்பதை நினவுபடுத்தினார் நண்பர். அடடா தவறவிட்டோமே என்றிருந்தது!

செப்டம்பர் 2007 குறுக்கெழுத்துப் புதிர் விடைகள்

குறுக்காக: 3. பாதரசம் 6. வர்மன் 7. மாந்தர் 8. விளக்குமாறு 13. சலிப்பூட்டு 14. தம்பதி 15. துவரையா 16. பின் வரிசை

நெடுக்காக: 1. அவரை விதை 2. ஆமணக்கு 4. தடுமாறு 5. சந்தடி 9. மாவலி 10. அபூர்வம் 11. கொடுமையான 12. கொம்பன் 13. சதிகாரி

செப்டம்பர் 2007 புதிர் மன்னர்கள்

1. வி. சந்திரசேகரன், சன்னிவேல், கலி.
2. விஜயா அருணாசலம், ·ப்ரீமாண்ட், கலி.
3. ஹேமா லக்ஷ்மிநாராயணன், அட்லாண்டா

சரியான விடை அனுப்பிய மற்றவர்கள்:

எஸ். பி. சுரேஷ் மைலாப்பூர், சென்னை முரளி சுவாமிநாதன் ராஜேஷ் கார்கா, நியூ ஜெர்சி
குன்னத்தூர் சந்தானம், சென்னை ஸ்ரீதரன் கிருஷ்ணமூர்த்தி, ·ப்ரீமாண்ட் லக்ஷ்மி சுப்ரமணியம், மும்பை சுமித்ரா ஜயஷங்கர், ·ப்ரீமாண்ட் வி.என். கிருஷ்ணன், சான்டா கிளாரா லக்ஷ்மி ஷங்கர், நார்கிராஸ், ஜியார்ஜியா கணேசன் வைதீஸ்வரன், அட்லாண்டா

இவர்களில் முதல் மூவர் சார்பில் அவர்கள் வாழும் பகுதியில் உள்ள தமிழ்மன்றத்துக்குத் தென்றல் தலா 10 டாலர் நன்கொடை வழங்கும். அவர்கள் வாழும் பகுதியில் தமிழ்மன்றம் இல்லாத பட்சத்தில், அவர்கள் விரும்பும் தொண்டு நிறுவனத்துக்குத் தென்றல் நன்கொடை வழங்கும்.

நீங்கள் புதிர் மன்னரா?

குறுக்கெழுத்துப் புதிருக்கான சரியான விடைகளை அக்டோபர் 25-க்குள் அனுப்பும் முதல் மூன்று வாசகர்களின் பெயர்கள் 'புதிர் மன்னர்கள்' சாதனைப் பட்டியலில் இடம் பெற்று அடுத்த இதழில் வெளிவரும். விடைகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: thendral@tamilonline.com. அக்டோபர் 25க்குப் பிறகு, விடைகளை www.tamilonline.com என்ற சுட்டியில் காணலாம்.

புதிருக்குப் புதியவரா? செய்முறையை அறிய ஜனவரி 2004, பிப்ரவரி 2004 இதழ்களையோ, அல்லது ww.tamilonline.com/thendral/PuthirHelp.aspx என்ற வலைத்தளத்தையோ பார்க்கவும்.

© TamilOnline.com