ஓட்ஸ் உப்புமா
தேவையான பொருட்கள்

ஓட்ஸ் - 250 கிராம்
டால்டா - 2 மேசைக்கரண்டி
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
நெய் - 2 மேசைக்கரண்டி

தாளிப்பதற்குத் தேவையானவை :

கடுகு - 1 தேக்கரண்டி
உளுந்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 3
கறிவேப்பிலை - 1 ஆர்க்கு
உப்பு - தேவையான அளவு
முந்திரிப் பருப்பு - 3

செய்முறை

ஓட்ஸை, வாணலியின் சிறிது டால்டா விட்டு வறுத்துக் கொள்ளவும்.

வாணலியில் ஒரு கரண்டி எண்ணெயும், ஒரு கரண்டி நெய்யும் விட்டுக் காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றைப் போட்டுத் தாளிதம் செய்து ஒன்றரைக் குவளை தண்ணீரில் உப்புப் போட்டுக் கரைத்து அதைத் தாளிதத்தில் விடவும்.

நன்றாகக் கொதி வந்ததும், வறுத்து வைத்திருக்கும் ஓட்ஸை அதில் கொட்டிக் கிளறி வெந்ததும் எடுத்துக் கொள்ளவும். வெகு விரைவாக வேகக் கூடியது என்பதால் குறைந்த நேரத்திலேயே அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.

முந்திரி பருப்பை வறுத்து உப்புமாவில் போட்டுக் கொள்ளலாம்.

சுவையான ஓட்ஸ் உப்புமா நொடியில் தயார்.

நளாயினி

© TamilOnline.com