பார்த்திபனின் ''காஸிப்''
ப்ரியதர்ஷன் ராஜீவ் மேனன், பி.சி. ஸ்ரீராம் போன்ற சிலம் விளம்பரத்துறையிலிருந்து சினிமாவில் நுழைந்தது போல் நோமாறாக தாவியிருக்கிறார் நடிகர் - இயக்குநர் - தயாரிப்பாளர் என்று சினிமாவில் பலமுகங்களைக் காட்டிய பார்த்திபன் இப்போது சொந்தமாக 'காசிப்' (Gossip) என்ற பெயரில் விளம்பரத் தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கியிருக்கிறார். நிறுவனத்தைத் தொடங்கிய சூட்டோடு சூடாக 'Henkoவின் Mr. White'க்காக ஒரு விளம்பரப் படத்தையும் தயாரித்து விட்டார். நடிகர் பிரபுதேவாவையும் நடிகை சங்கவியையும் வைத்து இந்த விளம்பரப்படத்தைப் படமாக்கியிருக்கிறார். இவரது விளம்பர நிறுவனத்திற்குப் பெயர் தேர்ந்தெடுத்துக் கொடுத்தது யார் தெரியுமா? பார்த்திபனின் மகள் கீர்த்தனாவும், மகன் ராதாகிருஷ்ணனும் தான். விளம்பரத் தயாரிப்பில் இவர் காட்டும் வேகத்தைப் பார்த்தால் சினிமாவை மூட்டைகட்டிப் பரண் மேல் போட்டுவிட்டாரோ? என்று எண்ணத் தோன்றுகிறது.

யாமினி

© TamilOnline.com