இடைவேளைக்குப்பிறகு.....
நீண்ட கால இடைவேளைக்குப் பிறகு மீண்டும் இயக்குநர் மகேந்திரன் 'உதிராத பூக்கள்' என்ற தன்னுடைய புதிய படத்தை மும்முரமாக இயக்கி வருகிறார். பிரெஞ்சு பெண்ணை மையமாகக் கொண்டது இந்தப் படத்தின் கதை. பிரான்சிலிருந்து இந்தியாவிற்கு நாட்டுப்புறக்கலைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்ய வரும் அந்தப் பெண் தனக்கு வழிகாட்டியாக (guide) இருப்பவரிடத்தில் காதல் வயப்பட்டு அவரையே திருமணம் செய்து சொள்கிறார். இந்தியக் கலாசாரத்துக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்ள பெரும் முயற்சி செய்கிறார். பிரான்சில் மருத்துவம் படிக்கும் மாணவி ப்ருதா கதாநாயகியாக நடித்திருக்கிறார். பாப் பாடகராக இருந்து நகைச்சுவை நடிகராக மாறியிருக்கும் கருணாஸ் வழிகாட்டி கதாபாத்திரத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.

யாமினி

© TamilOnline.com