பாரதிராஜா இயக்கும் 'பொம்மலாட்டம்'.
பாரதிராஜாவின் இயக்கத்தில் வளர்ந்து வருகிறது 'பொம்மலாட்டம்'. அர்ஜுன் நடிக்கும் இப்படத்தில் ஹிந்தி நடிகர் நானா படேகர் முக்கியப் பாத்திரத்தில் நடிக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் ஆகியவற்றை பாரதிராஜாவே கவனிக்கிறார்.

நாயகியாகக் காஜல் அகர்வால் நடிக்கிறார். விஜயகுமார், விவேக் மற்றும் பலர் நடிக்கும் இப்படத்தின் இசையை ரேஷமிய்யா அமைக்கிறார். கர்நாடகா மாநிலத்திலுள்ள வரலாற்றுச் சிறப்புக்க பதாமி என்னும் இடத்திலும் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

ஹிந்தியிலும் தயாராகும் இந்தப் படத்தில் நானா படேகர் தமிழ் பேசி நடிக்கிறார்.

தொகுப்பு: கேடிஸ்ரீ, அரவிந்த்

© TamilOnline.com