ஷங்கரின் ரோபோ
'சிவாஜி' படத்தை அடுத்து விரைவில் ஷங்கர் இயக்கப் போகும் படம் 'ரோபோ' இந்தியாவின் முதல் ஹை-டெக் சயன்ஸ் ·பிக்ஷன் படமாக உருவாக்கத் திட்டமிட்டிருக்கும் இப்படத்தில், ஷாருக் கான் கதாநாயகனாக நடிக்கவிருக்கிறார். படத்தின் தயாரிப்பாளரும் அவரே. இசை ஏ.ஆர். ரகுமான். கதை வழக்கம் போல சுஜாதா. கதாநாயகி மற்றும் மற்ற தொழில்நுட்பக் கலைஞர்கள் இன்னமும் தேர்வு செய்யப்படவில்லை. சிவாஜியைவிட இந்தப் படம் இன்னமும் பிரமாண்டமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

தொகுப்பு: கேடிஸ்ரீ, அரவிந்த்

© TamilOnline.com