சந்தானலக்ஷ்மி சகோதரிகள் பாடிய பக்திப் பாடல் குறுந்தட்டு
ஆறு சகோதரிகளைக் கொண்ட சென்னை சந்தானலக்ஷ்மி இசைக்குழுவினர் 'ஸ்ரீ விஷ்ணு லஹரி' என்ற பக்திப் பாடல் குறுந்தட்டு ஒன்றை வெளியிட்டுள்ளனர். இதில் விநாயகர், திருமால், திருப்பதி பாலாஜி, அலமேலுமங்கா, ஸ்ரீ க்ருஷ்ண பகவான், ஸ்ரீ ராமர், வீர மாருதி ஆகியோர் மீதான பதினைந்து பக்திப் பாடல்களைப் பதினைந்து ராகங்களில் பாடியுள்ளனர். சிவஸ்துதி, முருகன் பாடல்கள், அம்மன் பாடல்கள் என்று அடுத்தடுத்து வெளியிடத் திட்டமிட்டுள்ளார்கள்.

அனைத்துப் பாடல்களையும் தாங்களே இயற்றி, இசையமைத்துப் பாடியுள்ளது இந்தத் தொகுப்பின் சிறப்பு. சந்தானலக்ஷ்மியின் 'ஸ்ரீ விஷ்ணு லஹரி' நியு ஜெர்ஸியில் விற்பனைக்குக் கிடைக்கிறது. வேண்டுவோர் தொடர்புகொள்ள: மின்னஞ்சல்:venky.sadagopan@gmail.com

தொலைபேசி: (732) 207-1956

விலை: $12 (அமெரிக்காவில் மட்டும்; தபால், பேக்கிங் செலவு உட்பட)

வெங்கடேஷ் சடகோபன், நியூ ஜெர்சி

© TamilOnline.com