செப்டம்பர் 2007 : குறுக்கெழுத்துப்புதிர்
குறுக்காக

3. அன்புப் பிணைப்பில் தர வந்த உலோகம் வழிந்தோடும் (5)
6. பரம்பரையாய்க் காஞ்சிப் பெரியவர் மன்னரிடம் கண்டது (4)
7. மக்கள் குலத்தையழித்த சாந்தி, குடியேறிய மாதர் (4)
8. விரித்துச் சொல்லும்படி வேறிடஞ் செல் அதற்கு முன் இருளை நீக்குவது (6)
13. அசட்டு அல்லிப்பூ ஒன்றிரண்டு குறைய உற்சாகம் குன்றச்செய் (6)
14. இங்கே இம்மாதம் பதிவுத் திருமணம் செய்த ஜோடி (4)
15. இறப்பது வரை யாசிப்பவரிடம் பருப்பா என்ற கேள்வி (4)
16. இடையில்லாமல் பிசைபவரின் பிசையல் தந்தை மகற்காற்றும் உதவியில் தவறியதால் கிடைத்த இடம் (2,3)

நெடுக்காக

1. இதிலிருந்து 15-ல் இருப்பதா விளையும்? (பழமொழி) (3,2)
2. ஒரு தாவரம் சிதைத்த பாதி ஆவணம் மக்கு (5)
4. வேறுருவங் காட்டும் முன் அணை செயலில் தள்ளாடு (4)
5. குறுகிய தெருவின் கீழ் அரவம் (4)
9. அடியெடுத்து வைக்க தலை தந்த மன்னன் (3)
10. அவர் பெருமையிழந்த மாம்பூ கட்டுவது எப்போதாவது நடக்கும் (5)
11. குரூரம் கொண்ட மையா? முன்பே தா, பின்னர் அரை மன இணைப்பு (5)
12. காளை அவன் பெரிய இவன்தான் (4)
13. ஆமாம், உள்ளுக்குள் சுதேசித் துணியை மாற்றி அரசைக் கவிழ்க்கத் திட்டமிடுபவள்தான் (4)

புதிர் விடைகள் அடுத்த மாத (அக்டோபர் 2007) இதழில் வெளிவரும்.

வாஞ்சிநாதன்
vanchinathan@gmail.com

சொற்கள் தரும் கிளர்ச்சி

ஆகஸ்டு மாதப் புதிருக்கு ஆடிக்காற்று நிறைய ஆர்வலர்களைக் குவித்திருக்கிறது. பதினைந்து பேர் சரியான விடைகளை அனுப்பியிருக்கிறார்கள். பலரும் முதலில் குறு. 6-ல் உள்ள குறிப்புக்கு 'புரியாத' என்ற விடையை அனுப்பியிருந்தார்கள். சுட்டிக் காட்டிய பின்னரே அதைத் திருத்தியிருக்கிறார்கள். முறுக்கிய இழை = புரி (அந்தணர் அணிவது முப்புரி நூல் என்று சொல்லப்படுவது வழக்கு). யாது - எது; ('வாய்மை யெனப்படுவ தியாதெனின்' என்று தொடங்கும் பலரும் அறிந்த திருக்குறளில் இதைக் காணலாம்). அப்புதிரில் நெடு. 7-ல் 'மலர்ந்ததும் மல்லிகையில் மூக்கைத் துளைத்து வருவது (4), என்பதற்குத் தும்மல் என்ற விடை ஒளிந்திருப்பதைக் காண்பது எளிதென்றாலும், அதில் மூக்கைத் துளைப்பது என்பது மல்லிகையின் மணத்துக்கும், தும்மலுக்கும், பொருத்தமாக அமைந்தது சொற்கள் நமக்குத் தரும் கிளர்ச்சி.

"தாமிரபரணி" என்ற வலைப்பதிவை எழுதி வந்த (http://thaamiraparani.blogspot.com/2006/03/1_18.html ) திரு குமார் ராமசுப்ரமணியன், ஆகஸ்டு புதிரில் தென்றலில் வந்த "வளையாபதி" என்ற சொல்லுக்கான குறிப்பு அவருடைய வலைப்பதிவில் சென்ற ஆண்டு அவர் வெளியிட்ட புதிரை ஒத்திருக்கிறது என்று சுட்டிக்காட்டுகிறார்.

ஆகஸ்டு 2007 குறுக்கெழுத்துப் புதிர் விடைகள்

குறுக்காக:1. செவ்வந்தி 4. வரி 6. புரியாது 7. போலந்து 9. திகட்டாத 12. மருதாணி 14. பூமாதேவி 17. திணி 18. வித்திட்டு
நெடுக்காக:1. செம்பு 2. வளையாபதி 3. திளை 4. வல்ல 5. கதுப்பு 7. போண்டா 8. தும்மல் 10. கண்ணி 11. தர்மாவதி 13. தாவணி 15. விண்டு 16. ஆவி

நீங்கள் புதிர் மன்னரா?

குறுக்கெழுத்துப் புதிருக்கான சரியான விடைகளை செப்டம்பர் 25-க்குள் அனுப்பும் முதல் மூன்று வாசகர்களின் பெயர்கள் 'புதிர் மன்னர்கள்' சாதனைப் பட்டியலில் இடம் பெற்று அடுத்த இதழில் வெளிவரும். விடைகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி:thendral@tamilonline.com. செப்டம்பர் 25க்குப் பிறகு, விடைகளை thendral@tamilonline.com என்ற சுட்டியில் காணலாம்.

ஆகஸ்டு 2007 புதிர் மன்னர்கள்

1. விஜயா அருணாசலம், ·ப்ரிமோண்ட், கலி.
2. S.P. சுரேஷ், மைலாப்பூர், சென்னை
3. வி. சந்திரசேகரன், சன்னிவேல், கலி.

சரியான விடை அனுப்பிய மற்றவர்கள்:

ராஜேஷ் கர்கா, நியூ ஜெர்சி ஸ்ரீதரன் கிருஷ்ணமூர்த்தி, ·ப்ரீமாண்ட் சிங்காநல்லூர் கணேசன் குமார் ராமசுப்பிரமணியன் லக்ஷ்மி சங்கர் குன்னத்தூர் சந்தானம், வேளச்சேரி (சென்னை) V.N. கிருஷ்ணன், சான்டா கிளாரா (கலி.) முத்து சுப்பிரமணியன் ஜயசங்கர் ராமநாதன், ·ப்ரீமாண்ட் (கலி.) லக்ஷ்மி சுப்பிரமணியன், மும்பை முரளி ஹேமா லக்ஷ்மிநாராயணன், அட்லாண்டா

இவர்களில் முதல் மூவர் சார்பில் அவர்கள் வாழும் பகுதியில் உள்ள தமிழ்மன்றத்துக்குத் தென்றல் தலா 10 டாலர் நன்கொடை வழங்கும். அவர்கள் வாழும் பகுதியில் தமிழ்மன்றம் இல்லாத பட்சத்தில், அவர்கள் விரும்பும் தொண்டு நிறுவனத்துக்குத் தென்றல் நன்கொடை வழங்கும்.

புதிருக்குப் புதியவரா? செய்முறையை அறிய ஜனவரி 2004, பிப்ரவரி 2004 இதழ்களையோ, அல்லது www.tamilonline.com/thendral/PuthirHelp.aspx என்ற வலைத்தளத்தையோ பார்க்கவும்.

© TamilOnline.com