வார்த்தை சிறகினிலே...
இந்த விருது நான் சாதித்ததற்காகத் தரவில்லை. இனிமேலாவது நீ சாதிப்பாயா என்பதற்காகத்தான் கொடுத்திருக்கிறார்கள். அதனால், இன்னும் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்ற ஊக்கமும், உத்வேகமும் ஏற்பட்டிருக்கிறது.

பாரதிராஜா, பத்மபூஷன் விருது பெற்றபின்....

*****


இந்திய அறி எதிர்நோக்கியுள்ள பெரிய சவால் ஆசியக் கோப்பை போட்டி, இரண்டரை மாதத்துக்கு முன்பு பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற தொடரில் வெளிப்படுத்திய திறமையை இலங்கையிலும் வெளிப்படுத்தி வலுவான அணி என்பதை நிறுவ இந்திய வீரர்கள் தயாராக வேண்டும்.

இலங்கையை அதனுஐடய தாயகத்திலும், தலைசிறந்த பாகிஸ்தான் அணியையும் எதிர்கொள்வது சவால் நிறைந்தது. இந்த 3 அணிகளில் யார் யாருடன் மோதினாலும் போட்டி பரபரப்பாகவே இருக்கும்; என்றாலும் சிறப்பாக ஆடும் திறமையை இந்திய வீரர்கள் கொண்டுள்ளனர்.

சவுரவ் கங்குலி, இந்திய அணித் தலைவர், சென்னையில் செய்தியாளர்களிடம்...

*****


குறைந்தபட்சச் செயல்திட்டத்தை ஒட்டியே இந்த பட்ஜெட் இருக்கிறது என்றுதான் பலரும் குறை சொல்கிறார்கள். செயல் திட்டத்தை நிறைவேற்றவில்லை என்று யாரும் சொல்லவில்லை.

5 ஆண்டுகளில் செய்ய வேண்டியதை ஒரே ஆண்டில் செய்து விடமுடியுமா? இது என்ன ஒருநாள் கிரிக்கெட்டா? இது 5நாள் டெஸ்ட் போட்டி. 5 ஆண்டுகளில் செய்வதைத் தான் செயல்திட்டத்தில் கூறியிருக்கிறோம்.

பிரதமர் மன்மோகன் சிங் ஒரு பொருளாதார மேதை. பொருளாதாரப் பேரறிஞர். அழுத்தமான பல யோசனைகளைத் தந்தார். அது எனக்கு மகிழ்ச்சிதான்.

ப.சிதம்பரம், மத்திய நிதியமைச்சர், சென்னைப் பத்திரிகையாளர்களிடம்.....

*****


'எதையிம் செய்வீர்', 'பூத உலா' போன்ற சில கதைகளை வித்தியாசமான முறையில் எழுதி இருக்கிறேன். அவை கூட இயல்பாக எனக்கு எழுத வந்தவை தான். பொதுவாகவே, பரிசோதனை முயற்சிகளில் ஈடுபட எனக்கு விருப்பமில்லை. சக எதார்த்த எழுத்தாளர்களைப் போல இயல்பாக தன் போக்கிலே எழுதிக்கொண்டு போகவே விரும்புகிறேன்.

பரிசோதனை என்ற பெரியலே அழகியல் அத்துமீறல்கள் இங்கே நடந்து கொண்டிருக்கின்றன. அழகியல் என்பது ஒரு கருத்தியலை வெளிப்படுத்துவதற்காக உண்டானது. அந்தக் கருத்தியல்களுக்குள்ளேயே அழகியல் உள்ளடங்கி இருக்க வேண்டும்.

ஆனால், சோதனை முயற்சி என்ற பெயரிலே அதீத அழகியலை அவர்கள் கைக்கொள்கிறார்கள். அது அழகான பரு மாதிரியோ, மச்சம் மாதிரியோ இல்லாமல் சிலதிக்கட்டி மாதிரி இருக்கிறது.

பா. செயப்பிரகாசம், எழுத்தாளர், ஒரு பேட்டியில் .....

*****


குழந்தைகள் மீது பெற்றோர் தங்கள் விருப்பங்களைத் திணிக்கக்கூடாது. அவர்களின் விருப்பத்தை அறிந்து பாடங்களைத் தேர்வு செய்ய குழந்தைகளுக்கு உதவ வேண்டும். அப்போதுதான் அவர்களால் வெற்றியாளர்களாக முடியம். நகரங்களைச் சேர்ந்த மாணவர்கள் சாதிப்பதை கிராமப்புற மாணவர்களாலும் சாதிக்க முடியும். இதற்கு நமது குடியரசுத் தலைவர் அப்துல் கலாமே உதாரணம்.

தேர்வு நெருங்கும்போது மட்டும் பாடங்களைப் படிக்காமல் தினந்தோறுமூ படிக்க வேண்டும். அதேபோல் புத்தகப் புழுவாக மாறி மனப்பாடம் செய்வதைவிடப் புரிந்து கொண்டு படிப்பது சிறப்பானது. மதிப்பெண் பெறுவத மட்டுமே முக்கியம் அல்ல, பாடங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இது இளைஞர்களின் காலம். குற்றாலீஸ்வரன் முதல் குட்டிச் சாமியார் வரை அனைவரும் இளைஞர்களே.

ஜி.வி. செல்வம், வேலூர் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத் துணைவேந்தர், 'சிகரத்தை வெல்வோம்' மாணவர் வழிகாட்டி நிகழ்ச்சியில்....

*****


ஆசிய - பசிபி·க் மண்டலத்துக்குப் பொதுவான ஆராய்சிக்குப் பொதுநிதி ஏற்படுத்த வேண்டும். இந்த மண்டலத்தில் உள்ள நாடுகள், தங்கள் கண்டுபிடிப்புகளை ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்து கொள்ளலாம்.

அரசு மற்றும் தொழில்துறையினர் தொலைத்தொடர்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு நிதி அளிக்கலாம். இணையத்தளம் மற்றும் அகல - அலைவரிசைப் பயன்பாடு, நாட்டின் சமூக, பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

பெரும்பாலனவர்களுக்கு இணையத்தளமும் அகல-அலைவரிசைச் சேவைகளும் அதிகச் செலவை ஏற்படுத்துவதாக உள்ளன. குறைந்த செலவில் கிடைக்கும் வசதிகளையே மக்கள் பயன்படுத்த விரும்புகின்றனர். எனவே வரும் காலத்தில் வளரும் நாடுகளில் இச்சேவைகள் ஏற்றுக்கொள்ளக்கூடிய கட்டண விகிதத்தில் இருக்க வேண்டும்.

தயாநிதி மாறன், இந்திய தொலைத்தொடர்பு மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர், ஆசிய-பசி·பிக் நாடுகளின் தகவல் தொழில் நுட்பத்துறை மந்திரிகளின் கருத்தரங்கில் பேசியதிலிருந்து......

© TamilOnline.com