பிளம்ஸ் பழ ஜாம்
தேவையான பொருட்கள்

பழுத்த பிளம்ஸ் - 10
சர்க்கரை - 200 கிராம்
வெனில்லா எஸ்ஸென்ஸ் - 1 தேக்கரண்டி
சிட்ரிக் ஆசிட் - 1 சிட்டிகை

செய்முறை

பழுந்த பிளம்ஸ்களின் விதைகளை நீக்கிவிட்டு பழத்தை நறுக்கிக் கொள்ளவும்.

அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் பிளம்ஸ் துண்டுகளையும், சர்க்கரையும் ஒன்றாக கலக்கி வதக்கவும். 5 நிமிடத்தில் இவை கூழ் போல் சேர்ந்து வரும்.

அப்போது அடுப்பிலிருந்து இறக்கி சிறிது ஆறியதும், எஸ்ஸென்ஸ் ஒரு சிட்டிகை சிட்ரிக் ஆசிட் போன்றவற்றைக் கலக்கவும்.

ஜாம் ரெடி. சப்பாத்தி, பிரட் ஆகியவைகளுக்குத் தொட்டுக் கொள்ளலாம்.


எஸ்.கமலா சுந்தர்

© TamilOnline.com