ஏலேலோ ஐலசா
பயாஸ்கோப் பிலிம் பிரேமர்ஸ் சார்பில் கதை, திரைக்கதை அமைத்து வசனம் எழுதி தயாரித்து நடித்து இயக்கும் ரா. பார்த்திபனின் 'ஏலேலோ' படத்தின் ஆரம்பவிழா பட பூஜையாக மட்டுமில்லாமல் சமீபத்தில் தேசிய விருது பெற்ற தமிழ்த் திரைக் கலைஞர்களுக்கு 'வேற்றுமை பாராட்டாமல்' பாராட்டும் விழாவாகவும் இது இருந்ததால் கூடுதல் சுவாரஸ்யம் இருந்தது.

பத்மபூஷன் விருது பெற்ற பானுமதி, தேசிய திரைப்பட விருதுகள் பெற்ற மீடியா ட்ரீம்ஸ் நிறுவன தயாரிப்பாளர்கள், ஆஸ்கார் பிலிம்ஸ் இணை தயாரிப் பாளர் சுரேஷ், இயக்குநர்கள் பாரதி ராஜா, விக்ரமன், ஞான. ராஜசேகரன், சேரன் ஆர்ட் டைரக்டர் தோட்டா தரணி பி. கிருஷ்ணமூர்த்தி, பாடகி பவதாரணி, மாஸ்டர் உதயராஜ் ஆகியோருக்கு ஏ.ஆர். ரஹ்மான் அசோகஸ்தூபி நினைவுப் பரிசை வழங்கினார்.

''பார்த்திபனின் ஏலேலோவுக்கு எங்க எல்லோருடைய ஐலசாவும் உண்டு'' என்றார் கமல்ஹாசன்.

''ஏலேலோ படத்தில் ஐரிஷ், தமிழ் நாட்டுப்புறப் பாடல்களை கலந்து தரும் புதிய முயற்சியில் ஈடுபட்டிருக்கிறோம்'' என்றார் ஏ.ஆர். ரஹ்மான்.

கமல்ஹாசன், மணிரத்னம், ஷங்கர் ஆகியோர் இணைந்து படத்தை ஆரம்பித்து வைத்தனர்.

ஊர்சுற்றி

© TamilOnline.com