மன்ற மையம் www.forumhub.com
www.forumhub.com

தமிழ் மற்றும் ஆங்கில இலக்கியக் கதை, கவிதை, கட்டுரைகளுக்கான விவாதக் களம். இந்திய இசை மற்றும் மேற்கத்திய இசை பற்றிய தகவல்கள், இந்திய, தமிழக, உலக வரலாறுகள் குறித்த பார்வைகள். இந்திய விளையாட்டு. உலக, தமிழகத் திரைப்படங்கள் குறித்த பதிவுகள், இந்திய மற்றும் உலகளாவிய உணவுப் பழக்க வழக்கங்கள்... என ஏராளமான பக்கங்களை அடக்கி வெளிவருகிறது இந்த இணையத் தளம்.

பெரும்பாலான இணையத் தளங்கள் வலைவாசிகளைப் படிப்பவர்களாக மட்டுமே முன்னிறுத்தி வருகின்றன. ஆனால் ·போரம்ஹப் இணையத் தளம் தன்னுடைய வலைவாசிகளைப் பங்கேற்க வைக்கவும் செய்கிறது. ஒவ்வொரு வருக்குள்ளும் இருக்கின்ற சமூகம் சார்ந்த கருத்துகளை வெளிப்படுத்துவதற்குண்டான தக்க தளத்தை அமைத்துத் தருகிறது. இந்த இணைய தளத்தில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு கட்டுரையின் கீழும் வாசகர்கள் தங்களுடைய கருத்தைப் பதிவு செய்ய இடமளித்திருக்கிறது.

இந்தத் தளத்துக்கு வருகைதரும் வலை வாசிகளும் தங்களுடைய இன்னபிற படைப் புகளைப் பிரசுரிக்கலாம். தமிழில் படைப்புகளை உள்ளீடு செய்வதற்கான வாய்ப்புகளும் உள்ளன. உள்ள்£டு செய்த படைப்பை உடனடியாக அந்தத் தளத்தின் பட்டியலில் சேர்த்துக் கொள்ளும் விதமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. படைப்புகளுக்கான விமர்சனத்தையும் அறிந்து கொள்வதற்கு எதுவாகவும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

தமிழில் சுந்தரராமசாமி, காஞ்சனா தாமோதரன், இந்திரா பார்த்தசாரதி, ஜெய மோகன், பாவண்ணன் போன்றோர் விவாதக் களத்தில் ஈடுபட்டுள்ளனர். கல்கியின் பொன்னி யின் செல்வன், பார்த்திபன் கனவு போன்ற நாவல்கள் குறித்த விவாதங்களும் நடைபெற்று வருகின்றன. இந்த நூற்றாண்டின் பத்துத் தலைசிறந்த நாவல்கள் பட்டியலைத் தொகுக் கவும் சிலர் 'மும்முரமாக' முயன்று வருகின்றனர்.

சமூகம் பற்றிய, வாழ்க்கை முறை பற்றிய, இலக்கியம் பற்றிய விவாதங்கள் நடத்த விரும்புபவர்கள் பங்கேற்கச் சரியான இணையத்தளம் இது.

*****


விவாதத்திலிருந்து சில பகுதிகள்....

"இன்று 14-ஜனவரி-2001 அன்று சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கோடீஸ் வரன் போட்டி நிகழ்ச்சியைப் பார்த்தேன். அதில் ஒரு கேள்வி

"இவற்றில் எது காவிரியின் கிளை நதி இல்லை?

அ. கபினி, ஆ ஹேமாவதி, இ. துங்கபத்திரா"

துங்கபத்திரா சரியான விடை என்று சொன்னார். ஆனால் உண்மையில் இவை யாவுமே கிளை நதி அல்ல!

இவைகளைக் குறிக்க துணை நதி என்ற பதமே சரியானது என்று நினைக்கிறேன்."

"தமிழ்வழிக் கல்வி மட்டும் அல்ல. பொதுவாகவே, கழக அரசு, இரட்டை நாக்கு கொண்டது. விதவைகளுக்காகக் குடம் கண்ணீர் வடித்தவர்கள் அவர்கள். ‘கோரிக்கை அற்றுக் கிடக்குதண்ணே' என்கிற பலாப்பழப் பாட்டை முழங்கிய தலைவர்கள் அவர்கள். ஆனால் பத்திரிகை நடத்த வரும்போது, ‘குங்குமம்', ‘குங்குமச் சிமிழ்' என்றுதான் வைதீகமாகப் பெயர் வைக்க முடிகிறது அவர் களால். எங்கும் தமிழ் எதிலும் தமிழ், கோபாலபுரத்திலேயே ‘சன் டி. வி' ஆகிறது. உலக வியாபாரம் ஆங்கிலப் பெயரில்தான் இயலும் எனில், ஜப்பான்காரன் ஜப்பானிய மொழியிலேயே வியாபாரப் பொருள் களுக்கும் பெயர் வைப்பது எப்படி?" -பிரபஞ்சன்

"நீங்கள் பெண்கள் காலங்காலமாக அடிமைப்படுத்தப்படுகின்றார்கள் என்று ஒத்துக் கொள்கிறீர்கள். ஆனால் பெரிய பாறை ஒன்றை அவர்கள் மேல் வைத்து விட்டு அவர்களே எடுத்துக்கொள்ளட்டும் என்கிறீர்கள். உன்னால் பாறையை எடுக்கமுடியாதா என்ற கிண்டல் வேறு. எந்தப் பாறை என்கிறீர்களா?

அடுப்படி, நகை, பட்டுச்சேலை, புராணக்கதைகள், பிள்ளையார் கோயில், தீபாவளி, புருஷன், குழந்தைகள், மாமனார், மாமியார், வரதட்சிணை, மங்கையர் மலர், இன்னும் பல.

ஒரு பெண்ணுக்குத்திருமணம் என்றால் அதற்கு ஆயிரத்தெட்டு இன்டெர்வியூக்கள். இதெல்லாம் பாச் ஆன பின்னே யோனிப்பொருத்தம் இருக்க வேண்டும். இல்லேன்னா fail. அப்புறம் அக்கம் பக்கம் விசாரணை வேறு. பொண்ணு எப்படி. அடக்கம் ஒடுக்கமா இருக்காளா etc. இப்பிடி ஒரு பாறையை அவள் மேல போட்டுட்டு நீங்க பாட்டுக்கு ஜாலியா பொண்ணு விடுதலை பத்தி உடான்சு விட்டிங்கன்னா உங்களுக்கு எதோ சிக்கல் அப்பிடின்னு தாங்க தோணுது."

-வெசய ராகவன்

"தற்பொழுதுள்ள தமிழ்க் கதாநாயகர்களின் வயது விவரம்

ரஜினிகாந்த்- 51 கமலஹாசன் -47 விஜயகாந்த் -50 சரத்குமார் -44"

"wwrfc (World Wide Ramarajan Fan Club) ஸ்ரீராமராஜன் போற்றி!

டும்டும் டொண்டக்கணக்க டும்டும் டொண்டக்கணக்க

"பாலகுமாரன் பெண்களைப் பற்றி ஒரு வகையில எழுதுறார். உள்ள போய்ப் பார்த்தா அது பெண்களைப் போற்றுகிற விதமாக இல்லை. ஆனால் பாலகுமாரன் பெண்களைப் பத்தி உயர்வா எழுதுறார்னுதான் பல பெண்கள் நினைக்கிறாங்க. அப்படி ஒரு பிரமைய அவரால ஏற்படுத்த முடியுது. சந்தைக்கான எழுத்தின் இயல்பே உடனடியா ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவதுதான் தலைவலி வந்தா சாரிடான் சாப்பிடுற மாதிரி. அந்தத் தாக்கம் உடனடியா விலகியும் போயிடுது. கடைசியில் நிலைக்கிறது அந்த எழுத்தாளர்களின் பிம்பங்களே தவிர அந்தக் கதைகள் இல்லை." - அம்பை

சரவணன்

© TamilOnline.com