அன்புள்ள அப்பாக்களுக்கு ஒரு தினம்
தந்தையர் தினம் கொண்டாட ஆரம்பித்து ஒரு நூற்றாண்டு ஆகப் போகிறது. தனது ஸ்மார்ட் டான அப்பாவை வாழ்த்த நினைத்த அன்பு மகள் ஒருவர்தான் இதை ஆரம்பித்து வைத்தார். அந்த அப்பாதான் வில்லியம் ஸ்மார்ட்!

அவருக்கு ஆறு குழந்தைகள். ஆறாவது பெண் பிறந்தவுடன், அவரது மனைவி இறந்து விட அந்தக் குழந்தைகளை மிகக் கண்ணும் கருத்துமாக வளர்த்தார் ஸ்மார்ட். மேற்கு வாஷிங்டன் மாநிலத்தில் உள்ள ஒரு பண்ணை வீட்டில், குழந்தைகளுக்காகவே தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார். மறுமணம் செய்து கொள்ளாத ஸ்மார்ட், தனது குழந்தை களுக்கு அம்மா இல்லாத குறையே தெரியாத அளவுக்கு சீராட்டி வளர்த்தார்.

அவரது பாச மழையில் நனைந்த சொனோரா லூயி ஸ்மார்ட் டாட் (அவரது ஆறு குழந்தை களில் ஒருவர்), தந்தையை சரியான வகையில் வாழ்த்திப் போற்ற வேண்டும் என நினைத்தார். ஜூன் மாதத்தின் முதல் ஞாயிற்றுக் கிழமையை 'தந்தையர் தினமாக'க் கொண்டாட வேண்டும் (தந்தையின் பிறந்தநாள்) என்ற கோரிக்கையை, 1909ஆம் ஆண்டில் முன்வைத்தார் சொனோரா.

ஸ்போகேன் நகர கவுன்சில் இது குறித்து ஒரு முடிவுக்கு வருவதற்கு ஜூன் மூன்றாம் வாரம் ஆகிவிட்டது. கவுன்சிலின் அங்கீகாரம் கிடைத்த பின்னர், முதல் 'தந்தையர் தினம்' வாஷிங்டனில் உள்ள ஸ்போகேன் நகரில் 1910ஆம் ஆண்டு ஜூன் -19ல் வெகு விமரிசையாகக் கொண் டாடப்பட்டது. சொனோரா அடைந்த மகிழ்ச்சி க்கு அளவே இல்லை. ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிறு 'தந்தையர் தினமாக'ப் பதிவு பெற்றுவிட்டது. அடுத்த பத்து ஆண்டுகளுக் குள்ளாக, அமெரிக்காவின் மற்ற நகரங்க ளுக்கும் இது பரவத் தொடங்கியது.

ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிறை, 'தேசிய தந்தையர் தினமாக'க் கடைப்பிடிக்க வேண்டும் என்ற கோரிக்கை 1924ல் எழுந்த போது, அன்றைய அமெரிக்க ஜனாதிபதி கேல்வின் கூலிட்ஜ் அதற்கு ஆதரவு தெரி வித்தார். ஆனால், 1966ஆம் ஆண்டுதான் ஜனாதிபதி லிண்டன் ஜான்ஸன் கையொப்ப மிட்டு தந்தையர் தினத்தை அங்கீகரித்தார். அதன் பிறகு 1972ல் அப்போதைய குடியரசுத் தலைவர் ரிச்சர்ட் நிக்ஸன், ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிறு இனி நிரந்தரமாக, சட்டபூர்வமாக 'தேசிய தந்தையர் தினமாக'க் கடைப்பிடிக்கப்படும் என்று அறிவித்தார்.

'அன்னையர் தினம்' அங்கீகரிக்கப்பட்டு 60 ஆண்டுகளுக்குப் பின்னரே 'தந்தையர் தினத் துக்கு' அங்கீகாரம் கிடைத்தது குறிப்பிடத் தக்கது.

ரோஜாதான் தந்தையர் தினத்துக்கான அதிகாரப்பூர்வமான மலர். வெள்ளை அல்லது சிவப்பு ரோஜாக்களையே பயன்படுத்து கின்றனர். தந்தை உயிருடன் இருந்தால் சிவப்பு ரோஜா வையும், மறைந்து விட்டிருந்தால் வெள்ளை ரோஜாவையும் அணிய வேண்டும். வேலைப்பாடு மிகுந்த அழகிய கழுத்துப் பட்'டை'யைப் பரிசளிக் கலாம்.

பி.கு: அன்று அப்பாக்கள்தான் அவசியம் சமைக்க வேண்டுமாம் (அய்யோடா!).

பா.சங்கர்

© TamilOnline.com