தேர்தல் பயத்தில் தமிழ் சினிமா
தமிழ்ப்புத்தாண்டுக்கு வெளியான படங்களின் எண்ணிக்கை எதிர்பார்த்தபடி இல்லை. கமல் நடித்துவரும் 'ஆளவந்தான்' மற்றும் 'கடல்பூக்கள்', 'மிடில்கிளாஸ் மாதவன்', 'குங்குமப் பொட்டு கவுண்டர்' ஆகிய படங்கள் பல்வேறு காரணங்களுக்காகத் தள்ளி போய்விட்டன.

தாமதத்துக்குப் பிரதானமான ஒரு காரணம், தேர்தல். ஒவ்வொரு மாவட்டத்திலும் பொதுக் கூட்டங்களுக்கு ஆள் பிடிக்கிற வேலையில் ஈடுபட்டிருக்கிறார்கள் கட்சிபிரமுகர்கள். சில அப்பாவிகள் இன்னமும் சுய ஆர்வத்திலேயே கூட்டங்களுக்குப் போய் வருகிறார்கள். இந்த நேரத்தில் படத்தை ரிலீஸ் செய்தால் வருகிற கொஞ்ச நெஞ்ச கூட்டமும் வராமல் போயுவிடும் என்பது சினிமா உலகின் பயம்.

சில படங்கள் எதிர்பார்த்தபடி முடியாமல் போனதும் காரணம்.

தமிழ்மகன்

© TamilOnline.com