குழந்தை
பிள்ளை வடிவு
கொள்ளை அழகு
அள்ளித் தூக்க
துள்ளும் மனது

கள்ளம் இல்லா
உள்ளம் வெள்ளை
கொஞ்சும் மழலை
மிஞ்சும் குழலை
பிஞ்சுப் பாதங்கள்
பிஞ்சுக் கரங்கள்
துஞ்சும் கண்கள்
நெஞ்சம் அள்ளும்

செல்லக் குட்டி
வெல்லக் கட்டி
எங்க குட்டி
தங்கக் கட்டி
பட்டுக்கன்னம்
தொட்டுத்தடவி
முத்தம் கொடுக்க
சித்தம் விழையும்.

கோபாலன்

© TamilOnline.com