தமிழ்ப் பத்திரிகைகளின் தோற்றம்
முதல் தமிழ் பத்திரிகை தமிழ்நாட்டில் தொடங்கப்படவில்லை. 1802-ஆம் ஆண்டு இலங்கையில் தொடங்கப்பட்டது. 'சிலோன் கெஜட்' எனும் இந்தப் பத்திரிகை ஆங்கிலம், சிங்களம், தமிழ் என மும்மொழிகளில் வெளிவந்தது.

சென்னையில் 1831-இல் தொடங்கப்பட்ட முதல் தமிழ்ப் பத்திரிகை 'தமிழ்ப் பத்திரிகை' என்ற பெயரிலே வெளிவந்தது. இந்தப் பத்திரிகை சென்னைக் கிறித்துவ மதப் பிரசாரக் கழகத்தால் வெளியிடப்பட்டது.

1833-இல் சென்னையிலிருந்து 'ராஜ விருத்தி போதினி' எனும் பத்திரிகை வெளி வந்தது.

1840-இல் நாகர்கோயிலிலிருந்து சுவிஷேஷ பிரபாவ விளக்கம் என்னும் மாத இதழும் பாலதீபிகை என்னும் சிறுவர்களுக்கான காலாண்டிதழும் வெளிவந்தன.

1847-இல் சென்னையிலிருந்து திராவிட தீபிகை என்னும் மாத இதழ் வெளிவந்தது.

1849-இல் நாகர்கோயிலிலிருந்து நற் போதம் எனும் மாத இதழ் வந்தது.

1855-இல்தான் சென்னையிலிருந்து 'தினவர்த்தமானி' எனும் வாரப் பத்திரிகை வெளிவந்தது.

1832 - இல் சுதேசமித்திரன் பத்திரிகை தொடங்கப்பட்டது. இதன் ஆசிரியராக ஜி.சுப்பிரமணிய ஐயர் இருந்தார். 1832-இல் இந்தப் பத்திரிகை வாரப் பத்திரிகையாக மாற்றம் பெற்றது. மகாகவி பாரதி இந்தப் பத்திரிகை யில்தான் துணை ஆசிரியராகப் பணியாற்றினார்.

சுதேசமித்திரனிலிருந்து விலகிய பாரதி 1906-இல் இந்தியா பத்திரிகையைத் தொடங் கினார். நான்கு ஆண்டுகளே இந்தப் பத்திரிகை வெளிவந்தது.

தசாவதானம் கிருஷ்ணசாமிப் பாவலரால் 1914-இல் 'இன்றைய சமாச்சாரம்' எனும் பத்திரிகை கொண்டுவரப்பட்டது.

1917-இல் தேசபக்தன் வெளியாகியது.

தேசபக்தனை எதிர்த்து ஜஸ்டிஸ் கட்சியின் சார்பில் 1917-இல் 'திராவிடன்' பத்திரிகை கொண்டுவரப்பட்டது.

திரு.வி.க 1920-இல் நவசக்தி இதழைத் தொடங்கினார்.

1927-இல் வரதராஜிலு நாயுடு என்பவரால் தமிழ்நாடு பத்திரிகை தொடங்கப்பட்டது.

1932-களில் பெரியார் 'பகுத்தறிவு' 'குடியரசு' இதழ்களைத் தொடங்கினார்.

தற்போதுள்ள ஆனந்த விகடன், ஆனந்த விஜய விகடன் என்கிற பெயரில் 1928-இல் தொடங்கப்பட்டது. அப்போது அதன் ஆசிரிய ராக விகடகவி பூதூர் வைத்தியநாத ஐயர் இருந்தார். இந்தப் பத்திரிகையை 1934-இல் எஸ்.எஸ்.வாசன் விலைக்கு வாங்கி ஆனந்த விகடன் என்று பெயர் மாற்றம் செய்து வெளியிட்டார்.

ஆனந்த விகடனிலிருந்து விலகிய ரா. கிருஷ்ணமூர்த்தி (கல்கி) 1941-இல் கல்கி பத்திரிகையைத் தொடங்கினார்.

இரண்டாவது உலகப் போரின் காரணமாக மலேசியாவிலிருந்து தமிழ் நாட்டிற்கு வந்த சி.பா ஆதித்தனார் 1942-இல் தினத்தந்தி பத்திரிகையைத் தொடங்கினார்.

1944-இல் 'தினசரி' பத்திரிகை வெளி யானது. டி.எஸ் சொக்கலிங்கம் இதன் ஆசிரியராக இருந்தார்.

தமிழகத்தில் தோழர் ப. ஜீவானந்தத்தை ஆசிரியராகக் கொண்டு 1937-இல் ஜனசக்தி இதழ் தொடங்கப்பட்டது.

1947-இல் குமுதம் இதழ் வெளியானது. முதலில் மாதம் இருமுறையாக இந்த இதழ் வெளிவந்தது. பின்பு மாதம் மூன்று என மாறி, வாரம் ஒரு இதழாக மாற்றம் பெற்றது.

குமுதம் தொடங்கி ஓராண்டுக்குப் பின்னர் கல்கண்டு இதழ் வெளியானது.

1949-இல் திராவிட முன்னேற்றக் கழகம் பிறந்தது. இந்தக் காலகட்டத்தில் மு.கருணா நிதியின் 'முரசொலி' பத்திரிகை வார ஏடாகத் தொடங்கப்பட்டு நாளேடாக மாற்றம் பெற்றது.

திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து எம்.ஜி.ஆர் பிரிந்தவுடன் 'அண்ணா' எனும் நாளிதழைத் தொடங்கினார். அதன் ஆசிரியராக சோலை பொறுப்பேற்றார்.

1952-இல் தினத்தந்தி நிறுவனம் தனது துணைப் பத்திரிகையாக 'வாரந்தரி ராணி' பத்திரிகையைத் தொடங்கியது.

1977-இல் குங்குமம் இதழ் வெளியானது.

தொகுப்பு - சரவணன்

© TamilOnline.com