உலக அன்னையர் தினம் வரலாறு
கிரேக்கக் கடவுளான ரியா (Rhea), அன்னையர் தேவதையாகக் கொண்டாடப் படுபவர். ஒவ்வொரு ஆண்டும் வசந்த காலத்தின்போது அன்னையர் தேவதை 'ரியா' வை கிரேக்கர்கள் வழிபடுவார்கள். இந்த விழாவே பின்பு அன்னையர் தினமாக உருவானது.

1600 - களில் இங்கிலாந்தில் இது அன்னையர் ஞாயிறாகப் பரிமாணம் பெற்றது. ஒவ்வொரு ஆண்டும் உபவாச காலத்தின் நான்காவது ஞாயிறன்று இங்கிலாந்தின் மாதர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

அன்னையர் தினக் கொண்டாட்டம் கிரேக்கத்தில் தோன்றினாலும், அதை உலகெங்கும் பரப்பியது கிறிஸ்துவ மதம்தான். இங்கிலாந்து மற்றும் ஐரோப்பாவில், அன்னை மேரியை வணங்க இந்த தினத்தைப் பயன்படுத்திக் கொண்டனர்.

அமெரிக்காவில் 1872 - ல் அன்னையர் தினம் அறிமுகமானது.

செல்வி ஜார்விஸ் மற்றும் அவரது ஆதரவாளர் களின் முயற்சியால் அமெரிக்கா முழுவதும் அன்னையர் தினத்துக்கு ஆதரவு பெருகியது.

ஆனால் எந்தத் தேதியில் கொண்டாடுவது என்ற குழப்பம் சிறிது காலம் நீடித்தது. இப்போது, ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை உலகம் முழுவதும் அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது.

அப்போது, இங்கிலாந்தின் ஏழை எளிய மக்கள், பிரபுக்கள் வீட்டில் வேலை பார்த்து வந்தனர். இதனால், தமது குடும்பத்தை விட்டுப் பிரிந்து, எஜமானர் வீடுகளில் தங்கி இருந்தனர். எனவே, அன்னையர் ஞாயிறு அன்று இந்த வேலைக்காரர்கள் தங்கள் சொந்த ஊருக்குச் சென்று தங்கள் தாயைச் சந்திக்கும் வகையில் அவர்களுக்கு விடுப்பு அளிக்கப்பட்டது. தங்கள் அம்மாக்களுக்கு விருப்பமுடன் கொடுப்பதற்காகவே, தயாரிக்கப்பட்ட கேக் 'அன்னையர் கேக்' என்றே அழைக்கப்பட்டது.

© TamilOnline.com