மே 2001 : குறுக்கெழுத்துப்புதிர்
குறுக்கெழுத்தில் இரண்டு வகை. ஒன்று நேரடியாக விடையை விளக்குவது, ஆங்கிலத்தில் இதற்கு Quick Clues என்று கூறுவார்கள். மற்றது, ஆளைக் குழப்பி திசை திருப்பி வெவ்வேறு கோணங்களில் தேட வைக்கும் வகை, ஆங்கிலத்தில் Cryptic Clues என்று கூறுகிறார்கள்.

ஆங்கிலத்தில் சுமார் எண்பது வருடங்களாக நன்கு வளர்ச்சியடைந்த பாணி இங்கு கையாளப்பட்டுள்ளது. ஒரு வார்த்தையை அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து அக்குக்கு ஒரு அர்த்தம் ஆணிக்கு ஒரு அர்த்தம் ஆனால் மொத்தத்திற்கும் வேறு அர்த்தம் என்ற முறையில் அமைப்பது இதன் சிறப்பு.(அது சரி, `அக்கு' என்றால் என்ன? என்று யாருக்காவது தெரிந்தால் எனக்கு சொல்லுங்களேன்!)

குறுக்காக

1. ஆசிரியரிடம் பெருமதிப்பைக் காட்ட ருக்கு பதியுடன் வந்தாள்(5)
4. மென்மையானதென்றாலும் நெருப்புக்கருகே வைக்கக் கூடாது (3)
6. இங்கே தங்கவிடு தினசரி அடைப்படையில் (3)
7. மண்ணில் போட்டுப் புதைத்தாலும் ஆளைக் கொல்லும்! (3,2)
8. கங்கை மயானம் பாரம் விட்டுச் சென்ற பெண்ணா? (4)
9. முதற்பெண் சுற்றுதலை இட்டுத் திட்டலாம் (4)
12. ராசாத்தி ரம்யாவிடம் கண்ட நியதி (5)
14. பாதிரி புத்தமதம் சேர்ந்த மாற்றம் (3)
16. வானில் விரியும் தரையில் சுருங்கும் (3)
17. ஜீவனுடன் சேர்ந்து ஆடுமாடு (5)

நெடுக்காக

1. சிறு சேமிப்பில் ஈடுபடும் பறவை(3)
2. வாரமொருமுறையோ மாதமொருமுறையோ ஏடு (5)
3. வாரமொருமுறை வரும் மாதம் (4)
4. ஒரு நட்சத்திரம் அழகி தலையிட்ட வேலை (3)
5. ஓலையாலானவை பயமின்றி கள் வடிய சுபம் (5)
8. உள்ளிருந்து உறுத்தும் (5)
10. குடச் சிதைவால் குயத்தி சுடல் உபகரணம் (5)
11. தாயா? அந்தத் தூளா? (4)
13. மதிப்பிற்குரிய முதனமையான குருவிடம் முறுக்கு (3)
15. உன்னதமான தூய்மையுடைய புதனில் பிறந்தது (3)

வாஞ்சிநாதன்
vanchi@chennaionline.com


குறுக்கெழுத்துப்புதிர் விடைகள்

குறுக்காக:1. குருபக்தி 4. பஞ்சு 6. விடுதி 7. கண்ணி வெடி 8. மங்கையா 9. ஏசுவாள் 12. சாத்திரம் 14. திரிபு 16. சிறகு 17. வாயில்லாத
நெடுக்காக:1. குருவி 2. பத்திரிகை 3. திங்கள் 4. பரணி 5. சுவடி 8. மனசாட்சி 10. சுத்தியல் 11. அம்மாவா 13. திருகு 15. புனித

© TamilOnline.com