Tehelka.com
சேகால் : தற்போது ஆண்டுக்கு 10,000 ஐ ஐ டியூப்கள் தேவை. அடுத்த நான்காவது ஆண்டுகளுக்கு எவ்வளவு தேவை என்பதை நான் இன்னும் கணக்கிடவில்லை.

வெஸ்ட் எண்ட் : அப்பா! யாரையெல்லாம் பார்க்க வேண்டும்.

சேகால் : நான் பின்னணியில் இருப்பேன். நான் சொல்வதை நீங்கள் யாரிடமும் பேசக்கூடாது.

சசி : அப்படி நீங்கள் கொஞ்சம் கொடுத்துவிட்டு தயாரிப்பில் இறங்கலாம்.

சேகால் : இந்த ஆயுத தளவாடத்தை தயாரிக்கும் யாரையாவது உங்களால் பிடிக்க முடியுமா?

வெஸ்ட் எண்ட் : நான் எங்கே போக வேண்டும் என்று விரும்புகிறீர்கள்... ரஷ்யா, இஸ்ரேல்? எனக்கு நியூயார்க்கில், கனடாவில், அர்ஜெண்டினாவில், சிலியில் தளம் உண்டு.

சேகால் : இந்த ஐ ஐ டியூப்கள்...

வெஸ்ட் எண்ட் : அவை உங்களுக்கு வரும்

சேகால் : நான் வெளிப்படையாக சொல்கிறேன். இந்த பி.இ.-டெல்ப்ட் என்ற பொதுத்துறை நிறுவனம் பெரிய தலைவலி. எதையும் இறக்குமதி செய்யக்கூடாது என்று கொள்கை வகுத்துவிட்டனர். எனவே நீங்கள உயர்மட்டத்துல் இந்த இணைப்பை உடைக்க வேண்டும்.

வெஸ்ட் எண்ட் : சரி

சேகால் : பி.இ. என்றால் பாரத் எலக்ட்ரானிக்ஸ். டெல்ப்ட் என்பது ஹாலந்து நிறுவனம். அமெரிக்காவின் பொருளாதாரத் தடைக்குப் பிறகு அவர்கள் இங்கே வந்துவிட்டனர். அவர்களுக்கு அதிகார வர்க்கத்திலும், அமைச்சரவையிலும் பெரும் செல்வாக்கு. அப்பட்டமாக சொல்கிறேன்... அமைச்சரவையில் ஏகப்பட்ட தில்லுமுல்லுகள் நடக்கின்றன... அவர்களுக்கு ஏதுவாக வேண்டுமென்றே காலதாமதம் செய்யப்படுகிறது.

(மதுபானங்கள் வருகை. கிளாஸ்களை உயர்த்தி 'சியர்ஸ்')

சேகால்: என்னென்ன உதிரி பாகங்கள் வேண்டும் என்ற பட்டியலைத் தருகிறேன். கடைசியாக வாங்கிய விலைகளையும் தருகிறேன். கடைசி நிமிடம் வரை என்ன விலைக்கு வாங்குகிறோம் என்று அவர்களுக்கே தெரியாது. பலர் என்னிடம் வருவார்கள். நான் அவர்களிடம் , ''10 லட்சம் ரூபாய் கொடுங்கள். பிறகு பேசுவோம்'' என்று கூறிவிடுவேன்.

வீடியோவில் இருந்து முக்கிய துளிகள்...

தெஹல்கா வெப்சைட்டில் 41 பக்கங்களில் சந்தித்த நபர்களின் உரையாடல் வெளிவந்துள்ளது. அவற்றில் முக்கியமான உரையாடல்களின் தொகுப்பு

'டாலர்களாக நீங்கள் தரலாம்' பா.ஜ.தலைவர் பங்கார லட்சுமண்.

'ஜார்ஜ் பெர்னாண்டஸ் அலுவலகத்தைத் தான் என்னால் தொடர்பு கொள்ள முடியும்' ஜெயா ஜேட்லி, சமதா கட்சி தலைவர் (ராஜினாமா)

'10 சதவீதத்துக்கு குறைந்து என்னால் எதுவும் செய்ய முடியாது. பிரதமர் இதில் சம்பந்தப் படுவார்.' ஆர்.கே. ஜெயின், சமதா கட்சி பெருளாளர்.

'ரூ 100 கோடி கமிஷனை இந்த ஆண்டு எதிர்பார்க்கிறேன்.' ராஜ்குமார் குப்தா, ஆர்எஸ்எஸ் பொருளாளர்.

'பங்காருவுடன் நேரடியாக பணத்தைக் கொடுத்துவிடுவோம்' மொகிந்தர் பால் சாஹ்னி பெலிஸ் தூதர்.

'எவ்வளவு பணத்தை பெர்னாண்டஸ் எடுத்துக் கொள்வார் என்று எனக்கு தெரியாது. ' பிரிகேடியர் அனில் சேகர்.

'இரு கம்பெனிகளில் யார் கமிஷன் தருவதுஷ மேஜர் ஜெனரல் சவுத்ரி.

© TamilOnline.com