தை மாதத்தில் இரண்டு ‘டும் டும்’
மணிரத்னத்தின் உதவியாளர் அழகம்பெருமாள் இயக்கும் படத்துக்கு ‘டும் டும்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே இவருடைய இயக்கத்தில் விஜய்-சிம்ரன் நடிப்பில் தயாரான ‘உதயா’ படம் கிடப்பில் இருப்பதால் இதன் படப்பிடிப்பு தேவைகளை கமுக்கமாக முடித்துக் கொண்டிருக்கிறார் அழகம்பெருமாள். குற்றாலம், நெல்லை, நாகர்கோவில் பகுதிகளில் 60 சதவீதம் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. தை மாதம் படம் வெளியாகும். எதை வைத்துப் படத்துக்கு ‘டும் டும்’ என்று பெயர் வைத்தாரோ....படம் ரிலீசானதும் கையோடு கையாக அவருக்கும் ‘டும் டும்’ கொட்டவிருக்கிறார்கள்.

தமிழ்மகன்

© TamilOnline.com