எண்பது வயது காதல் கிழவன்?
80 வயதை எட்டிக் கொண்டிருக்கும் ஜெமினி கணேசன் தன் அறுபதாவது ஆண்டு திருமண நாளை பிரம்மாண்டமாகக் கொண்டாடத் திட்டமிட்டிருக்கிறார். இம்மாதம் 30ந் தேதி சென்னை கலைஞர் அரங்கத்தில் இதற்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. இதற்கிடையில் ‘கிருஷ்ணதாசி’ தொலைக்காட்சித் தொடரின் படப்பிடிப்புக்கு வந்த அவருக்கு படக் குழுவினர் வாழ்த்துக் கூறி கெளரவித்திருக்கிறார்கள். ‘’ஒரு முடிவு பண்ணித்தான் எனக்கு இந்த விழா எடுக்கறாங்கன்னு நினைக்கிறேன். இன்னமும் ‘காதல் மன்னன்’ னு இவனைச் சொல்ல வேண்டியதில்லை. வயசாயிப் போச்சுன்னு மக்களுக்குச் சொல்றதுக்குதான், என் பசங்க இப்படி பண்றாங்க’’ என்று கமெண்ட் அடித்துச் சிரித்திருக்கிறார் ஜெமினி.

தமிழ்மகன்

© TamilOnline.com