சங்கவியின் இரண்டாவது ஆட்டம்
'ரிஷி' படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் சரத்குமார். இவருக்கு ஜோடிகளாக மீனாவும் சங்கவியும் நடிக்கிறார்கள். சங்கவிக்கு மீண்டும் பிரகாசமான வாய்ப்பு. இப் படத்தைத் தொடர்ந்து 'தாலி காத்த வேலியம்மன்' படத்தில் பிரபுவுடன் ஜோடி சேர்ந்திருக்கிறார். இதைத் தொடர்ந்து சேரன் தயாரித்து இயக்கும் படத்திலும் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. வெறும் கவர்ச்சிப் பதுமையாக மட்டும் ஆட்டம் போட்டால் போதாது என்ற புரிதலோடு தற்போது களம் இறங்கியிருக்கிறார் இந்த முறை பார்ப்போம். இரண்டாவது இன்னிங்ஸில் இடம் பிடித்தவர்கள் ஏராளம் பேர் இருக்கிறார்கள். அதற்கு உதாரணமாக ரகுவரன், ரம்யா கிருஷ்ணன் போன்றவர்களைக் குறிப்பிடலாம்.

-

© TamilOnline.com