அன்புடன் அருண்குமார்
'அன்புடன்' படத்தின் மூலம் அருண்குமாருக்கு நல்ல அங்கீகாரம் கிடைத்துள்ளது. படத்தைப் பார்த்த சில தயாரிப்பாளர்கள் தங்கள் படத்தில் அருண்குமாரை நடிக்க வைக்கப் பேச்சுவார்த்தையிலும் ஈடு பட்டிருக்கிறார்கள். தயாரிப்பாளர்கள் சங்கம் இப்போது புதிய படங்களுக்கான பூஜை அறிவிப்புகளை நிறுத்தி வைத்திருப்பதால் பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை விழுந்திருப்பதாகச் சொல்கிறார் அருண்குமார். அதிர்ஷ்டம் வருகிறபோது வரட்டும் என்று புதுத் தெம்போடு தன்னுடைய பிறந்தநாளைக் கொண்டாடியிருக்கிறார். முழுக்க, முழுக்க ஊனமுற்ற குழந்தைகளுக்கு மத்தியில் தன் பிறந்த நாளைக் கழித்ததோடு அவர்களைத் தான் நடித்த 'அன்புடன்' படத்துக்கும் அன்புடன் அழைத்துச் சென்றிருக்கிறார் அருண்குமார்.

-

© TamilOnline.com