பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு
அந்த இளைஞனுக்கு ஒரு கனவிருந்தது. தன்னுடைய யூத சமூகத்தினரை எல்லோரும் விரட்டியடிக்கிறார்கள் என உணர்ந்திருந்தான் அவன். ஐரோப்பா முழுவதும் யூதர்கள் மத ரீதியான தாக்குதலுக்கு உள்ளாகிக் கொண்டிருந்தார்கள்.

யூதர்கள் தாங்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதைப் பிறர் அறியாதவண்ணம் மறைத்தவர்களாக நாடு விட்டு நாடு ஓடிக் கொண்டிருந்தார்கள். தன்னைப் போன்ற யூத சமூகத்தினருக்குத் தனி நாடு ஒன்று வேண்டும் என கனவு காண ஆரம்பித்தான் தியோடர் ஹெலிஸ் என்னும் அந்த இளைஞன்.

கனவினை நனவாக்கும் உறுதியும், மனோதிடமும் இருந்தபடியால் விரைவிலே தியோடர் ஹெலிஸ் நூறு பக்கத் திட்டமொன்றை எழுதி முடித்தான். யூதர்களுக்கென்று ஒரு தனி நாடு வேண்டும் என இத் திட்டம் பேசுகிறது.

1897ல் ‘முதல் யூதர்கள் உலக மாநாடு’ ரகசியமாகத் தியோடர் ஹெலிஸின் தலைமையில் நடத்தப் பெற்றது. இம் மாநாட்டில் இருநூறு பேர்தான் கலந்து கொண்டார்கள். எனினும் பல யூதப் பணக்காரர்கள் தியோடருக்கு ரகசியமாக ஆதரவு தெரிவித்தார்கள்.

இம் மாநாட்டின் முடிவுகளின்படி ‘யூதர் தேசிய நிதி’ என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. உலகமெங்குமுள்ள யூதர்கள் இந்த அமைப்பிற்குப் பணத்தைத் தாராளமாகக் கொடுத்தனர்.

யூதர்களுக்கு தனியே நாடு வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டதே தவிர, அந்த நாடு எங்குள்ளது என யாருக்கும் தெரியாது. தொடர்ந்து மூன்று, நான்கு மாநாடுகளில் இதைப் பற்றி விவாதிக்கப்பட்டது.

அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் குடியேறுவதில் தியோடருக்குக் கொஞ்சமும் விருப்பமில்லை. யூதர்களின் தாயகம் என்று சொல்லப்படும் பாலஸ்தீனமே யூதர்கள் குடியேறச் சிறந்த இடம் எனத் தியோடர் முடிவெடுத்து அதனை ஏகமனதான தீர்மானமாய் நிறைவேற்றினார்.

அப்பொழுது பாலஸ்தீனம் ஓட்டோமான் துருக்கியர்களின் ஆட்சியின் கீழ் இருந்த பல நாடுகளில் ஒன்றாக இருந்தது. அங்கு குடியிருந்தவர்களில் யூதர்கள் பத்து சதவீதத்திற்கும் குறைவே. மொத்த மக்கள் தொகையில் முஸ்லிம்கள் 90 சதவீதம் பேர்.

‘நில வங்கி’ என்றொரு திட்டம் யூதர்களால் அமல்படுத்தப்பட்டது. அதன்படி ‘யூதர் தேசிய நிதி’ ஆதரவில் யூதர்கள் அதிகப் பணம் கொடுத்துப் பாலஸ்தீனத்தில் நிலங்களை வாங்கத் தொடங்கினார்கள். படிப்படியாக யூத மக்கள் மெல்லப் பாலஸ்தீனத்தில் குடியேறத் தொடங்கினார்கள்.

1914-18 ம் ஆண்டு வரை நடந்த முதல் உலகப் போரில் பிரிட்டன் மற்றும் அதன் ஆதரவு நாடுகள் வெற்றி பெற்றன. 1917-ம் ஆண்டு, டிசம்பர் 9 ம் தேதி வெளியிடப்பட்ட பால்·பர் பிரகடனத்தின்படி பாலஸ்தீனம் பிரிட்டனின் ஆட்சியின் கீழ் வந்தது.

பிரிட்டன் அரசினுள் தாக்கம் செலுத்துமளவு பல யூதர்கள் இருந்தபடியால் யூதர்களுக்கென தனியே ஒரு நாட்டைப் பாலஸ்தீனத்தில் ஜோர்டான் நதிக்கரையில் அமைக்க பிரிட்டன் ஒப்புக்கொண்டது.

இதற்குப் பின்னர் பிரிட்டன், அமெரிக்க விமானங்களில் யூதர்கள் பாலஸ்தீனத்திற்கு வந்தபடியே இருந்தார்கள். முஸ்லிம்களின் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்ய ஹகானாஹ் (Haganah) இர்கம் (Irgum) என்று இரு யூதத் தீவிரவாதக் குழுக்கள் இயங்கத் தொடங்கின.

1919-ம் ஆண்டில் 58,000 யூதர்கள் பாலஸ்தீனத்தில் குடியேறியிருந்தார்கள்.

யூதர்களின் ஆக்கிரமிப்பை எதிர்த்து இஸ்ஸத்தீன் அல்காசம் என்றவர் தலைமையில் பாலஸ்தீன இளைஞர்கள் ஒன்று திரண்டனர். 1921-ல் தொடங்கிய இவர்களது போராட்டம் 1929-ம் ஆண்டு முழுமையானதோர் கட்டத்தை அடைந்தது. யூதர்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டிருந்த நிலையில், 1935 ம் ஆண்டு, நவம்பர் 19 ம் தேதியன்று -ஸ்ஸத்தீன் அல் காசம் கொல்லப்பட்டார். அடுத்த ஆண்டே பாலஸ்தீன முஸ்லிம்களின் புரட்சி முற்றிலுமாக முறியடிக்கப்பட்டது.

இப் புரட்சியை ஆராய பிரிட்டிஷ் அரசாங்கம் ‘பீல் கமிஷன்’- ஐ அமைத்தது. 1937- ம் ஆண்டு ஜுலை 7-ம் தேதியன்று பீல் கமிஷன் தனது அறிக்கையை வெளியிட்டது. அதன்படி பாலஸ்தீனத்தை மூன்றாகப் பிரிப்பது என முடிவானது. யூதர்களுக்கு ஒரு பிரிவும், முஸ்லிம்களுக்கு ஒரு பிரிவும், பிரிட்டிஷ் மேற்பார்வையில் ஒரு பிரிவும் உருவாக்கப்பட்டது.

ஹாஜி அமீன் ஸ்ரீஸைனி தலைமையில் முஸ்லிம்கள் இந்த அநீதிக்கு எதிராகப் போராடினர். ஹாஜி அமீன் ஸ்ரீஸைனி நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். தொடர்ந்து 1939 ம் ஆண்டில் இரண்டாம் உலகப்போர் மூண்டது.

இரண்டாம் உலகப் போரில் யூதர்கள் ஜெர்மன் நாஜி படைகளால் வேட்டையாடப்பட்டதைத் தொடர்ந்து, பாலஸ்தீனத்திற்கு வந்து குடியேறிய யூதர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது.

1946-ம் ஆண்டில் இரண்டாம் உலகப்போர் முடிவின்போது பாலஸ்தீனத்தில் யூதர்களின் எண்ணிக்கை 6,08,000 - ஆக உயர்ந்து விட்டது. அவர்கள் வசம் 9 முதல் 12 சதவீத நிலங்கள் இருந்தன.

1948 ஆம் ஆண்டில் பிரிட்டிஷார் பாலஸ்தீனத்திலிருந்து வெளியேறினார்கள். புதிதாய் உருவாக்கப்பட்டிருந்த ஐக்கிய நாடுகள் சபையில் பாலஸ்தீனத்தை இரண்டாகப் பிரிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அன்றைக்கு ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்பினராய் இருந்த நாடுகள் 56. தீர்மான வோட்டெடுப்பில் கலந்து கொள்ளாதவை 10. எதிர்த்தவை 13. ஆதரவாய் வாக்களித்த நாடுகள் 33.

1948- ம் ஆண்டில் மே 14-ம் தேதியன்று ‘இஸ்ரேல்’ சுதந்திர நாடாகத் தன்னை அறிவித்துக் கொண்டது. சுதந்திரப் பிரகடனம் முடிந்த சில மாதங்களில், இஸ்ரேலுக்கு எதிராக, எகிப்து, ஜோர்டன், சிரியா, லெபனான் மற்றும் ஈராக் ஆகிய நாடுகள் போர் தொடுத்தன. 15 மாதங்கள் இப் போர் நீடித்தது. அமெரிக்காவின் மறைமுக உதவியால் இஸ்ரேல் வென்றது.

இஸ்ரேல் அரசாங்கம் முஸ்லிம் மக்களின் மேல் கட்டற்ற அராஜகங்களைக் கையாளத் தொடங்கியது. மனித உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில், அகதிகளாய் முஸ்லிம்கள் 7,50,000 பேர் நாட்டை விட்டு வெளியேறினர். -ஸ்ரேல் வசம் இல்லாத பாலஸ்தீனத்திலும், அருகேயிருந்த அரபு நாடுகளிலும் இந்த முஸ்லிம்கள் குடியேறினர்.

உரிமையாளர்கள் இல்லாத நிலங்களை யூதர்கள் தமதாக்கிக் கொண்டனர். ‘Law of Return’ என்னும் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இச் சட்டத்தின் சாராம்சம் உலகத்தில் உள்ள யூதர்கள் அனைவரும் இஸ்ரேலுக்கு வரலாம் என்பதே.

நாட்டை விட்டு வெளியேறி இருந்த ஹாஜி அமீன் ஹ¤ஸைனி 1962 ம் ஆண்டு பாலஸ்தீனிய தேசியக் குழுவை (PNC) அமைத்தார். 1962-ம் ஆண்டு -ந்த அமைப்பு ‘பாலஸ்தீனிய விடுதலை அமைப்பு’ (PLO) எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்த அமைப்பின் ராணுவப் பிரிவு ‘பத்தாஹ்’ என்றழைக்கப்படுகிறது. இந்த ராணுவப் பிரிவின் முதல் தளபதியாகப் பதவியேற்றவர் யாசர் அராபத்.

1965-ம் ஆண்டிலிருந்து ‘பத்தாஹ்’ இஸ்ரேலுக்கு எதிரான கொரில்லாத் தாக்குதல்களை நிகழ்த்தியது.

1967-ம் ஆண்டில் இஸ்ரேல் ராணுவம் மிச்சமிருந்த பாலஸ்தீன நிலங்களையும் ஆக்கிரமிக்கத் தொடங்கியது. ஜெருசலேம் நகரம், எகிப்து வசமிருந்த காசா பகுதி, சினாய் வளைகுடா போன்ற இடங்கள் இஸ்ரேல் வசம் வந்தன. இந்த ஆக்கிரமிப்பை இன்று வரை எந்த நாடும் அங்கீகரிக்கவில்லை.

1949-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட நான்காவது ஜெனிவா கூட்ட முடிவுகளின்படி இந்த நில ஆக்கிரமிப்பு ஐ.நா. சபையின் விதிகளை மீறுவதாகின்றது.

இஸ்ரேல் அரசாங்கம் ஜெருசலேமைத் தலைநகரமாக அறிவித்தது. இரண்டு நாடுகள் தவிர ஏனைய நாடுகள் தங்களது தூதரகங்களை ஜெருசலேத்துக்கு இன்றுவரையிலும் மாற்றவில்லை.

இஸ்ரேல் அரசு, (1967 ம் ஆண்டு) ஆக்கிரமித்த பாலஸ்தீன நிலத்தினுள் -ன்றுவரை 3,50,000 யூதர்களைக் குடியமர்த்தியிருக்கிறது. பாலஸ்தீன முஸ்லிம் மக்களை வெளியேற்றியபடி உள்ளது.

இன்று பிரச்சனை வேறு ரூபங்களில் வளர்ந்துவிட்டாலும் தொடக்கம் -ப்படியாகத் தான் அமைந்தது.

-மாயா

© TamilOnline.com