மனதோடு மழைக்காலம்
சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி. செளத்ரி தயாரிப்பில் உருவான 'அற்புதம்' படத்தை இயக்கிய அற்புதன் இயக்கத்தில் உருவாகிறது 'மனதோடு மழைக்காலம்'.

நாயகனாக ஷாம் நடிக்க அவருடன் நித்யாதாஸ் மற்றும் சமிக்ஷா இணைந்து நடிக்கிறார்கள். இப்படத்திற்கான பாடல் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் சேலஞ்ச் சக்திவேல், இயக்குநர் அற்புதன், ஒளிப்பதிவாளர் ராகவ், இசையமைப்பாளர் கார்த்திக்ராஜா, பவதாரிணி, பாடலாசிரியர் நா. முத்துக்குமார், ஆர்.பி. செளத்ரி போன்றவர்கள் கலந்து கொண்டனர்.

இப்படத்தில் இடம் பெறும் முத்துக்குமார் எழுதிய பாடல் ஒன்று ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்திற்கான இசையை கார்த்திக்ராஜா அமைத்திருக்கிறார்.

கேடிஸ்ரீ

© TamilOnline.com