ஜூலை 2006 : குறுக்கெழுத்துப் புதிர்
குறுக்காக

3. தமிழகம் ஒன்றாக இல்லாதபோது ஆண்டோ ர் (5)
6. விதி மாற்றத்தால் விருந்து நல்வழிக்கு வா (4)
7. புத்தத் துறவி மரம் வெட்டி மரணம் தழுவ சண்டை (4)
8. "ஓரகத்தன்" மையல் கொள்ள நிடத மன்னன் தேர்ச்சி பெற்றது (4, 2)
13. அரசார் பிரஜையுடன் தோன்றும் தஞ்சை மாவட்டத்து ஊர் (6)
14. கவிழுங்குதிரையில் உட்கார்ந்து முழுதாகச் சாப்பிடு (4)
15. பசு பல சேர்ந்தால் அபாயம் (4)
16. நாக்கும் குத்துவது இதனாலோ? (2, 3)

நெடுக்காக

1. இனிப்புப் பண்டம் குலுங்க வெளிச் சட்டம் (5)
2. விழுந்தது வேரின்றி போக பீதி கவ்வ போட்டி (5)
4. தோரணம் பண்டிகைக்கல்ல (4)
5. சூட்டைக் குறை வெக்கை குறைய கத்தரிக்கோல் வேலை (4)
9. நியமிக்கப்பட்ட பணி திருப்பிச் செலுத்த வேண்டியது (3)
10. ஆனாலும் இக்கனி கிழங்காகாது (5)
11. ஆற்றோரம் கற்று வசித்திரு (5)
12. கெட்டது பாறைக்கு முன்பு துக்கப்படு (4)
13. முகங்கெட்ட கமுகு சந்நியாசிகள் வாழிடம் சேர அரசனுக்கு அடையாளம் (4)

vanchinathan@gmail.com


ஜூன்2006 புதிர் மன்னர்கள்

1. சந்திரசேகரன், சன்னிவேல்
2. ராஜேஸ் கார்கா, எடிஸன், நியூ ஜெர்சி
3. குமார் ராமசுப்ரமணியன், நியூ ஜெர்சி

புதிர்மன்னர்கள் மூவர் சார்பில் அவர்கள் வாழும் பகுதியில் உள்ள தமிழ்மன்றத்துக்குத் தென்றல் தலா 10 டாலர் நன்கொடை வழங்கும். அவர்கள் வாழும் பகுதியில் தமிழ்மன்றம் இல்லாத பட்சத்தில், அவர்கள் விரும்பும் தொண்டு நிறுவனத் துக்குத் தென்றல் நன்கொடை வழங்கும்.

ஜூன் 2006: குறுக்கெழுத்துப் புதிர் விடைகள்

குறுக்காக: 3. மாசிலாமணி, 6. திட்டம், 7. கடாரம், 8. புதுக்கவிதை, 13. அறிவில்லாத, 14. கருமாரி, 15. மனதில், 16. கரும்புள்

நெடுக்காக: 1. மதிப்புரை, 2. முடமாக்கு, 4. சிறுகதை, 5. மகரம், 9. விசிறி, 10. வல்லினம், 11. வேதவல்லி, 12. திருதிரு, 13. அரிப்பு

© TamilOnline.com