இனிப்பு வகைகள்
மாயா பஜார் இது ஒரு பழைய தமிழ் சினிமாவின் பெயர்!! ஆனால், இந்தப் பெயரைச் சொன்னால் நினைவுக்கு வருவது: (கல்யாண) சமையல் ( சாதம்). இங்கிருந்து பல்லாயிரம் மைல்கடந்து (திரைகடல் ஓடி) திரவியம் தேட வடஅமெரிக்காவில் புகழிடம் புகுந்துள்ள பிரம்மச்சாரி(!)களுக்கும், சம்சாரிகளுக்கும் நம் மண்ணை நினைவூட்டும் புதிய பகுதி (மாயா பஜார்) இது.

தனியாகத் தங்கியுள்ள பிரம்மச்சாரிகளுக்கு சில இந்திய உணவு வகைகள் தயாரிக்கும் விதம் எளிமைப் படுத்தி தரப்பட்டுள்ளன.

என்ன காய், கனி வகைகள் மட்டும் அங்கு கிடைப்பதையொட்டி நீங்கள் மாற்றிக் கொள்ள வேண்டும்!

கூடுதல் போனஸ்! இல்லத்தரசிகளுக்கு தமிழ் மண் மணக்கும் இனிப்பு வகைகள் சில தொடர்கின்றன...

கார்ன் ப்ளேக்ஸ்

தேவையான பொருட்கள்

ஆப்பிள் - 2
கார்ன் ப்ளேக்ஸ் - 4 ஸ்பூன்
வெண்ணெய் நீக்கிய பால் - 1 கப்
ஸ்வீட்டெக்ஸ் - 4 துளிகள்
வெண்ணிலா எஸென்ஸ் - 4 துளிகள்

செய்முறை

அடி கெட்டியான வாணலியில் பாலை நன்றாகக் காய்ச்சவும். பால் அதன் அளவிலிருந்து பாதியாகும் வரை நன்கு காய்ச்சவும். காய்ச்சிய பாலை பின்னர் குளிர வைக்கவும்.

ஆப்பிள் தோலை நீக்கி அதை நறுக்கிக் கொள்ளவும். இத்துடன் காய்ச்சிய பாலையும் வெண்ணிலா எஸென்ஸ், ஸ்வீட்டெக்ஸ் ஆகியவற்றைச் சேர்க்கவும். இதனை மிக்ஸியில் போட்டு நன்கு கலக்கிக் கொள்ளவும்.

ஒரு கிண்ணத்தில் கார்ன் ப்ளேக்ஸை தூவி பின்னர் ஆப்பிள் கலவையை அதனுடன் கலக்கவும். இதனை பிரிட்ஜில் வைத்து சில மணி நேரம் கழித்து குளிர்ச்சியாகப் பரிமாறவும்.

© TamilOnline.com