பொட்டில் அடிக்கும் குட்டிக் கவிதைகள்
சமயலறைக் கச்சேரி
குக்கரின் புல்லாங்குழலுக்கு
கடுகு வெ(அ)டித்தது மத்தளம்..

ஆணி அடித்தல்
சுவரின் நெஞ்சைக் குத்திக் கிழித்து
அரங்கேறியது புகைப்படம்.

மரணம்
மரணமே! சற்று பொறு
இந்த கவிதை ஜனிக்கும் வரை..!

மின்னல்
மழைத்துளிக்கும் மண்ணுக்கும்
நடந்த திருமணத்தை
படம் பிடித்தது மின்னல்..!

சுஜாதா ராமப்ரஸாத்

© TamilOnline.com