மார்ச் 2001 : குறுக்கெழுத்துப்புதிர்
குறுக்கெழுத்தில் இரண்டு வகை. ஒன்று நேரடியாக விடையை விளக்குவது, ஆங்கிலத்தில் இதற்கு Quick Clues என்று கூறுவார்கள். மற்றது, ஆளைக் குழப்பி திசை திருப்பி வெவ்வேறு கோணங்களில் தேட வைக்கும் வகை, ஆங்கிலத்தில் Cryptic Clues என்று கூறுகிறார்கள்.

தமிழ் பத்திரிகைகளிலும் செய்தித் தாள்களிலும் பெரும்பாலும் முதல் வகை மட்டுமே காண முடிகிறது. அம்முறையில் பொது அறிவைச் சோதிக்கும் வண்ணம் புதிர்க் கேள்விகள் அமையும். உதாரணமாக, ` கமல், ரஜினி, ஸ்ரீதேவி நடித்து பாலசந்தர் இயக்கிய படம்’ என்றால் அனேகமாக விடை `மூன்று முடிச்சு’ என்றிருக்கலாம். இது நேரடி முறை.

ஆனால் இங்கு Cryptic Clues வகையில் புதிர்கள் தரவிருக்கிறோம். (இந்த முறையில் எழுத்தாளர் சுஜாதா பல புதிர்களை உருவாக்கியுள்ளார்.)

ஆங்கிலத்தில் சுமார் எண்பது வருடங்களாக நன்கு வளர்ச்சியடைந்த பாணி இங்கு கையாளப்பட்டுள்ளது. ஒரு வார்த்தையை அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து அக்குக்கு ஒரு அர்த்தம் ஆணிக்கு ஒரு அர்த்தம் ஆனால் மொத்தத்திற்கும் வேறு அர்த்தம் என்ற முறையில் அமைப்பது இதன் சிறப்பு.(அது சரி, `அக்கு' என்றால் என்ன? என்று யாருக்காவது தெரிந்தால் எனக்கு சொல்லுங்களேன்!)

குறுக்காக

1. ஈடுபாடின்றி இணங்கு, மூக்கும் இடையில் சேரும் (5)
4. துணிந்த பேச்சுவாக்கில் ஆறுக்குள்ளா? (3)
6. கனி சுவைக்க தலித்துகள் கொண்டது (3)
7. மாறுபட்ட நத்தையோட்டை விளக்கும் மலரின் இடையைக் கிள்ளி வம்பு (5)
8. மாலை விரும்பி இறுதியாகத் தொடங்கு (4)
9. முதலில் சாகாத கிராமத்து மக்கள் பத்திரம் (4)
12. முதற்கனியின் புத்திலை (5)
14. உறுப்பினர் கட்டணத்திற்குக் குறுக்கு வழியா?? (3)
16. இதை மேற்கொண்டோர் மனவியையே கொஞ்சம் தூரத்துறவு என்று நினைப்பர் (3)
17. இச்சீட்டில்தான் இறைவனின் எண்ணம் இருக்கும்! (5)

நெடுக்காக

1. போக்கு கட்சியினர் முதலில் கண்டன கோஷம் (3)
2. குழப்பத்தில் நாடகம் தொடங்காமல் மிருகம் சரணடையுமிடம்(5)
3. மணியான வியாபாரியை மணம்புரிந்த வேடன்? (4)
4. பால் பொருளுக்கு முந்தியது (3)
5. திறமை பெரிது, குறைத்துச் சாயம் சேர்த்துக் கலக்கவும் (5)
8. எழுத்தாளர்களுக்குப் பெண் மனம் கடல் போன்றது (5)
10. தகராறு (5)
11. புத்திசாலிக்கு வெட்டக் கூடிய நிலவு (4)
13. நிலவு உதயம் வயல், சுழி நீங்க ஆதரவு (3)
15. சுரமற்ற அவசரமில்லாக் குணம் செய்தால் புண்ணியம் (3)

வாஞ்சிநாதன்
vanchi@chennaionline.com

குறுக்கெழுத்துப்புதிர் விடைகள்

குறுக்காக:1. ஒப்புக்கு 4. அஞ்சா 6. கதலி 7. வலம்புரி 8. ஆரம்பி 9. சாசனம் 12. மாந்தளிர் 14. சந்தா 16. துறவு 17. திருவுளம்
நெடுக்காக:1. ஒழிக 2.புகலிடம் 3. குறவன் 4. அறம் 5. சாதுரியம் 8. ஆழமானது 10. சச்சரவு 11. கூர்மதி 13. தயவு 15. தானம்

© TamilOnline.com