கோதுமை அதிரசம்
தேவையான பொருட்கள்

கோதுமை மாவு - 250 கிராம்
வெல்லம் - 200 கிராம்
தேங்காய் துருவல் - 1மேசைக்கரண்டி
ஏலக்காய்ப் பொடி - 1/2 தேக்கரண்டி
ரி·பைண்ட ஆயில் - 250 கிராம்

செய்முறை

வெல்லத்தைத் தூள் செய்து ஒரு பாத்திரத்தில் போட்டு ஒரு கை தண்ணீர் விட்டு அடுப்பில் வைக்கவும்.

வெல்லம் கரைந்த பின் அதில் மாவையும், தேங்காய்த் துருவலையும் போட்டுக் கிளறவும்.

ஏலப்பொடியைச் சேர்த்துக் கிளறி இடிக்கவும்.

எண்ணெயைத் தொட்டுக் கொண்டு சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெயை விட்டு அடுப்பில் வைத்துக் காய்ந்தவுடன், பிளாஸ்டிக் பேப்பரில் உருண்டைகளை வைத்து எண்ணெயைத் தொட்டுக் கொண்டு சற்று கனமாகத் தட்டிப் போடவும்.

உப்பி வந்ததும் திருப்பிவிட்டு வெந்ததும் எடுத்து விடவும்.

அரிசி மாவு அதிரசம் போலவே மிகவும் சுவையாக இருக்கும்.

நளாயினி

© TamilOnline.com