கோதுமை இடியாப்பம்
தேவையான பொருள்கள்

கோதுமை மாவு - 500 கிராம்
உப்பு - தேவையான அளவு

செய்முறை

வாணலியை அடுப்பில் வைத்துக் காய்ந்தவுடன் கோதுமை மாவை நன்றாகப் பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

வறுத்த மாவு நன்றாக சூடு ஆறியவுடன், தேவையான அளவு உப்பு சேர்த்துத் தண்ணீர் விட்டுப் பிசைந்து கொள்ளவும். பச்சைத்தண்ணீர் போதுமானது. கொதிக்கும் நீரில் மாவைப் பிசைந்தால் மாவு கொழகொழப்பாக மாறி இடியப்பம் பிழிய வராது.

இட்லிப் பானையை அடுப்பில் வைத்து இட்லி அவிப்பது போல் ஆவியில் இடியாப்பத்தைப் பிழிந்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

தேங்காய்த்துருவல், வெல்லப்பாகு சேர்த்து சாப்பிடலாம்.

இனிப்பு பிடிக்காதவர்கள் தக்காளித்தொக்கு செய்து தொட்டுக் கொண்டு சாப்பிடலாம். மிகவும் சுவையாக இருக்கும்

நளாயினி

© TamilOnline.com