உருளைக் கிழங்கு சப்பாத்தி
தேவையான பொருள்கள்

உருளைக் கிழங்கு - 500 கிராம்
மிளகாய்த் தூள் - 2 தேக்கரண்டி
உப்பு - 2 தேக்கரண்டி
பெருங்காயம் - சிறிதளவு
கோதுமை மாவு - 500 கிராம்
உப்பு - 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - 4 தேக்கரண்டி
நெய் - 100 கிராம்

செய்முறை

உருளைக் கிழங்கை வேக வைத்துத் தோல் எடுத்துக் கட்டி இல்லாமல் உதிர்த்துக் கொள்ளவும்.

பொடித்த உருளைக் கிழங்குடன் மிளகாய்த்தூள் உப்புடன் பெருங்காயம் கரைத்து விட்டு எல்லாவற்றையும் நன்கு கலந்து சிறிய உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.

கோதுமை மாவுடன் உப்பு எண்ணெய் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டுப் பிசைந்து கொள்ளவும்.

பிசைந்த மாவை உருளைக்கிழங்கு உருண்டைகள் எத்தனை உள்ளதோ அதே அளவு உருண்டைகள் உருட்டிக் கொள்ளவும்.

மாவை லேசாகப் பரப்பி அதற்குள் உருளைக்கிழங்கு உருண்டையை வைத்து மூடி, அரிசி மாவைத் தொட்டுக் கொண்டு சப்பாத்தியாக இட்டுக் கொள்ளவும்.

தோசைக் கல்லைக் காய வைத்துச் சப்பாத்தியைப் போட்டு ஒரு பக்கம் வெந்ததும் திருப்பிப் போட்டு நெய் தடவவும்.

இரண்டு பக்கமும் நெய் தடவி வெந்ததும் எடுத்துச் சூடாகச் சாப்பிடவும்.

நளாயினி - காஞ்சனா

© TamilOnline.com