வெய்யில் காலத்துக்கு வற்றல் வடாம்
ஓம வடாம்

தேவையான பொருட்கள்

புழுங்கலரிசி - 1 கப்
ஜவ்வரிசி - 2 ஸ்பூன்
ஓமம் - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
அலுமினிய ஃபாயில்- தேவையானது
நல்லெண்ணெய் - 4 ஸ்பூன்

செய்முறை

புழுங்கலரிசி, ஜவ்வரிசி இவற்றை 8 மணி நேரம் ஊற வைக்கவும். கிரைண்டரில் வழவழப்பாக அரைக்கவும். ஓமம், உப்பு போட்டு கலக்கவும்.

குக்கரில் சிறிதளவு தண்ணீர்விட்டு கொதிக்கவிடவும். வாய் அகன்ற பாத்திரத்தில் 1 கப் நீர்விட்டு குக்கரில் வைக்கவும். அதன் மேல் மேடுபள்ளமில்லாத தட்டை போட்டுமூடவும்.

அலுமினிய ஃபாயிலில் சிறிதளவு நல்லெண்ய் தடவி தட்டின்மேல் வைத்து மாவில் 2 ஸ்பூன் எடுத்துவிட்டு மெல்லியதாக இட்டு குக்கரை மூடவும். 2, 3 நிமிடங்களில் ஆவியில் வடாம் வெந்துவிடும்.

வேறு ஒரு ஃபாயிலில் மற்றொரு வடாத்தை ரெடியாக இட்டு வைக்கவும்.

வடாம் சற்று ஆறியதும் ஒட்டாமல் எடுக்க வரும்.

சிலர் சில நேரங்களில் மாலைநேரத்தில் டிபனாக சாப்பிடுவார்கள்.

இப்படி வேகவைத்த வடாங்களை நிழலில் அல்லது வெயிலில் காயவைத்து எடுத்து வைக்கவும்.

வடாத்தை சுட்டோ , அல்லது எண்ணெய்யில் பொரித்தோ சாப்பிடலாம்.

குறிப்பு: சிறு குழந்தைகளுக்கும், பிரசவித்த பெண்களுக்கும் வாடம் சுட்டு கொடுக்கலாம். உடலுக்கு ஆரோக்கியமானதும்கூட.

வடாம் ஜவ்வரிசி போடாமலும் செய்யலாம்.

இந்திரா காசிநாதன்

© TamilOnline.com