குழம்பு வகைகள் - பாகற்காய் அரைப்புளி குழம்பு
தேவையான பொருட்கள்
புளி - எலுமிச்சை அளவு (சுமார் சைஸ்)
பாகற்காய் - 1/2 பவுண்டு
சாம்பார் பொடி - 2 ஸ்பூன் (1/2 கரண்டி)
கடலை பருப்பு - 1 ஸ்பூன்
மிளகாய் வற்றல் - 4
கடுகு - 1 ஸ்பூன்
பெருங்காயம் - சிறிதளவு
தேங்காய் துருவல் - 2 ஸ்பூன்
துவரம் பருப்பு - 1 கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 4 ஸ்பூன்

செய்முறை

துவரம் பருப்பை வேக வைக்கவும். அடி கனமான பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பெருங்காயம், கடுகு, கடலை பருப்பு, மிளகாய் வற்றல், தேங்காய் இவற்றை பொன்னிறமாக வறுக்கவும். நறுக்கிய பாகற்காய் துண்டுகளை அத்துடன் சேர்த்து வதக்கவும். புளி கரைத்து விட்டு உப்பு, சாம்பார் பொடியுடன் கொதிக்க விடவும். 10 நிமிடங்கள் (நிதானமாக எரியும் அடுப்பில்) கொதித்தவுடன் வெந்த பருப்பை போட்டு கிளறி 5 நிமிடங்கள் கொதிக்க விடவும்.

கருவேப்பிலை அல்லது கொத்தமல்லி போடவும். அரை ஸ்பூன் வெல்லத் தூள் போட்டால் சுவை அதிகமாகும்.

இந்திரா காசிநாதன்

© TamilOnline.com