ஜனவரி 2002 : வாசகர் கடிதம்
நானும் என் கணவரும் (வயதுமுறையே 60, 70) மே 19-ஆம் தேதி அமெரிக்கா வந்தோம். இங்கு இத்தகைய அருமையான தமிழ் புத்தகத்தைத் தாங்கள் பிரசுரிப்பது குறித்து எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி. இங்கு எங்கள் மருமகள் மாதா மாதம் தென்றல் படிக்க கொண்டு வந்து கொடுக்கிறாள். படிக்காமல் விட்டுப் போன புத்தகங்களைக்கூட வாங்கிப் படித்து விட்டோம். இடையில் Dec 2000 (முதல் புத்தகம்) February 2001, April 2001 ஆகிய 3 புத்தகங்களும் படிக்கக் கிடைக்கவில்லை. நாங்கள் வருகிற 30-ஆம்தேதி சென்னைக்கு புறப்படுகிறோம். நாங்கள் இங்கிருந்து கிடைக்காத 3 புத்தகங்களைத் தவிர மற்ற எல்லாவற்றையும் எடுத்துச் செல்லப் போகி றோம். இனி அடுத்த மாதத்திலிருந்து தென்றல் படிக்க முடியாதே என்றிருக்கிறது. இருந்தாலும் என் மருமகளிடம் தென்றல் புத்தகத்தைச் சேர்த்து வைக்கச் சொல்லியிருக்கிறேன். உங்களுடைய இந்தப் பத்திரிகை மேன்மேலும் வந்து கொண்டிருக்க எங்களுடைய ஆசிகள். பிரார்த்தனைகள்.

ஜெயா வரதன், நியூயார்க்
*****


தென்றல் இதழை மிகவும் ரசித்து மகிழ்கிறேன். நல்லமுறையில் வெளியிடுகிறீர்கள்.

சுப்பிரமணி, மெக்சிகன்
*****



'தென்றல்' இதழில் உள்ள நிறைகள் ஏராளம் என்றாலும் ஒரு சில மாற்றங்கள் செய்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். உதாரணமாக 'குறுக்கு எழுத்துப்புதிர்' அதில் ஒரு சில வார்த்தைகளாவது கண்டுபிடிக்கும் விதமாக எளிதாக இருந்தால் என்னைப் போன்ற சாதாரணவாசகர்களும் முயற்சி செய்ய ஆர்வம் ஏற்படும்.

இந்திராகாசிநாதன்
*****


தென்றலுக்கான முதல் பிறந்த நாள் பரிசு

வாழ்க தென்றல். வளர்க தென்றல். பீடுநடை போடட்டும் தென்றல் என்ற என் எண்ணத்தைப் பிரதிபலிக்கத்தான் என்னை இந்த 'அ'மெரிக்காவிற்கு வரவழைத்தானோ என் மூத்த மகனான சுந்தரே சனாரோ எனத் தோன்றுகிறது. செல்லட்டும் நேரம்.

காலத்தையும் நேரத்தையும் வெல்வதிலே தனி மனிதன் முயற்சிக்கிறான், ஈடுபடுகிறான், வெல் கிறான்.

தனி மனித மேம்பாட்டிலே என்னை முப்பது வருடங்களாக ஈடுபடுத்திக் கொண்ட காரணத் தினாலே பேனா கூற்றிற்கு ஈடு வேறு எதுவும் இல்லை என உணர்த்தியது. முயற்சிக்கிறேன் தென்றலுக்காக. தென்றல் வாசகர்களுக்காக.

சுந்தர்ராஜன், அமெரிக்கா
*****


முதற்கண் எனது புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தென்றல் பத்திரிக்கை என்னை மிகவும் கவர்ந்துள்ளது.

பாரதி, அமெரிக்கா
லஷ்மி. சிவசுப்பிரமணியம், மொன்றியல், கனடா.
*****


கீதாபென்னட் அவர்களின் 'வித்தியாசம்' கதையைக் கடந்த தென்றல் இதழில் படித்தேன். இந்தக் கதையை இப்போது படிக்க ஏதுவான சூழ்நிலையை ஏற்படுத்தித் தந்த தென்றலுக்கு என்னுடைய நன்றிகள். இந்தக் கதை மட்டுமல்லாமல் தென்றலின் மற்ற பகுதிகளும் மிக அருமையாக இருந்தன. தென்றலுக்கு என்னுடைய முதல் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

திருவேங்கடம், சென்னை.
*****


கடந்த ஒரு வருடமாக தென்றல் இதழை வெற்றிகரமாக நடத்தி வரும் பதிப்பாளர் மற்றும் ஆசிரியர் குழுவினர்களுக்கு என்னுடைய மனங் கனிந்த வாழ்த்துக்கள். என்னுடைய 'செம்மங்குடி' கட்டுரையை வெளியிட்டமைக்கு மிக்க நன்றி. தென்றல் தொடர்ந்து பல பிறந்த நாள்களைக் கொண்டாட என்னுடைய வாழ்த்துக்கள்.

டி.கே. விஸ்வநாதன், கலிபோர்னியா
*****


நான் தற்போது பெங்களூரிலிருந்து அமெரிக்கா வந்துள்ளேன். டிசம்பர் மாத தென்றல் இதழைப் படித்தேன். இப்போதுதான் தென்றல் இதழை முதன்முறையாகப் படிக்க வாய்ப்புக் கிடைத்தது. சீரும் சிறப்பு மிக்க இத்தகையதொரு இதழைக் கொண்டு வரும் உங்கள் குழுவினர்களைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை. உபயோககரமான செய்திகளை உடனுக்குடன் வழங்கும் விதத்தில் தென்றல் இதழ் வெளிவந்து கொண்டிருக்கிறது. தென்றலின் ஒட்டுமொத்த 12 இதழ்களையும் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் இப்போது எனக்குள் ஏற்பட்டிருக்கிறது. மீண்டும் பெங்களூருக்கு நான் திரும்பிய பிறகு தென்றலுக்கு என்னாலியன்ற உதவிகளைச் செய்வேன் என்று உறுதி கூறுகிறேன்.

சுந்தரேசன் நடராஜன், கலிபோர்னியா
*****

© TamilOnline.com