நாசர் இயக்கும் 'பாப் கார்ன்'
நாசர் ஏற்கனவே 'அவதாரம்', 'தேவதை', 'மாயன்' படங்களை இயக்கியிருக்கிறார். இவரது நான்காவது இயக்கமாக கனா பிலிம் மேக்கர்ஸ் என்ற நிறுவனத்தின் சார்பில் உருவாக்கும் இந்த புதிய படைப்பிற்கு 'பாப்கார்ன்' என்று பெயரிட்டுள்ளார்.

இப்படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் கதாநாயகனாக நடிக்கிறார். மணிரத்னம் டைரக்ட் செய்த 'இருவர்' படத்திற்கு பின் மீண்டும் இப்படம் மூலம் தமிழில் நடிப்பது குறிப்பிடத்தக்கது. ஜோடியாக சிம்ரன் நடிக்கிறார். மேலும் விவேக், ஊர்வசி, சந்திரசேகர், தியாகு மற்றும் பலர் நடிக்கிறார்கள். புதுமுக நடிகையாக சிம்ரனின் இரண்டாவது தங்கை ஜோதி நவ்வால் நடிக்கிறார்.

இசை, காதல் இவற்றை மையமாக வைத்து உருவாகிவரும் இப்படம் ஒரு இசைத் திருவிழாவாக இருக்கும் என்று நாசர் குறிப்பிட்டார்.

இசை - யுவன் சங்கர் ராஜா, பாடல் - கவிஞர் வாலி, கலை - தோட்டா தரணி, ஸ்டண்ட் - விக்ரம் தர்மா, ஒளிப்பதிவு - P.S. தரண், தயாரிப்பு - கமீலா K. நாசர், கதை, இயக்கம் - ம. நாசர்.

தமிழ்மகன்

© TamilOnline.com