வருகிறான் 'மெஜிஸியன்'
3D படத்தை இந்தியாவுக்கு அறிமுகப்படுத்திய நவோதயா அப்பச்சன் மீண்டும் ஒரு 3D படத்தோடு குழந்தைகளை குது கலப்படுத்த வருகிறார். 'மைடியர் குட்டிச் சாத்தான்' சென்ற தலை முறை குழந்தைகளை வசீகரித்தது. இப்போது வசியம் செய்ய வரு பவன் 'மெஜிசியன்'

படத்தின் பெரும்பகுதி நியூ யார்க் நகரில் உருவாகியுள்ளது. உலகவர்த்தக மையக் கட்டிடத்தைப் படத்தில் பிரதானமாகக் காட்ட யோசித்துக் கொண்டிருந்த படக்குழுவினருக்கு, அது தாக்குதலுக்கு ஆளாகி தரைமட்டமானதில் கூடுதல் அதிர்ச்சி!

''பரவாயில்லை ! அவ்வளவு பெரிய கட்டிடம் தரைமட்டமானதை முதன்முதலாகப் படம் பிடித்துவந்த இந்தியக் குழுவாக இருப் போம்'' என்று படக்குழுவை வழி அனுப்பி வைத்தராம் அப்பச்சன்.

பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் இந்தியாவின் தலைசிறந்த மாயஜால வித்தகராக இப்படத்தில் நடிக்கிறார்.

அப்பச்சனின் இளயமகன் ஜோஸ் இயக்கும் படம் இது.

அஸ்வினி கெளல் ஒளிப்பதிவு செய்கிறார். இசை ஜெகன்.

தமிழ்மகன்

© TamilOnline.com