ஜனவரி 2002 : குறுக்கெழுத்துப்புதிர்
குறுக்கெழுத்தில் இரண்டு வகை. ஒன்று நேரடியாக விடையை விளக்குவது, ஆங்கிலத்தில் இதற்கு Quick Clues என்று கூறுவார்கள். மற்றது, ஆளைக் குழப்பி திசை திருப்பி வெவ்வேறு கோணங்களில் தேட வைக்கும் வகை, ஆங்கிலத்தில் Cryptic Clues என்று கூறுகிறார்கள்.

ஆங்கிலத்தில் சுமார் எண்பது வருடங்களாக நன்கு வளர்ச்சியடைந்த பாணி இங்கு கையாளப்பட்டுள்ளது. ஒரு வார்த்தையை அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து அக்குக்கு ஒரு அர்த்தம் ஆணிக்கு ஒரு அர்த்தம் ஆனால் மொத்தத்திற்கும் வேறு அர்த்தம் என்ற முறையில் அமைப்பது இதன் சிறப்பு.(அது சரி, `அக்கு' என்றால் என்ன? என்று யாருக்காவது தெரிந்தால் எனக்குச் சொல்லுங்களேன்!)

குறுக்காக

5. வழுதிநாட்டு ஏழைகள் வாழுமிடம் தமிழ்நாட்டில் இல்லை (6)
6. ஆண்டவனுக்குக் கொடுப்பது நனவாகு (2)
7. அல்லலுறு பாதி அந்தணன் திரும்பி நுழைய விவரங்கள் எழுதப்பட்டுள்ளது (4)
9. தெய்வாதீனமாகப் பிழைத்தவர் கூறும் மெல்லிய அளவு (4)
10. இறைவனே! தலையில்லாமல் அங்கு சேர வரும் மிருகம் (4)
12. பாத்திரத்திலே பறக்குமோ? (4)
13. ஏற்றவாறு பாதி ஜொலிக்கும் விதம் (2)
14. மசி வர அப்பன் பிற்பாதி சீர்கெட்ட பித்தன் (6)

நெடுக்காக

1. தண்டச்சோறு கொஞ்சம் ஆறிவிட்டதா(2)
2. சுவரில் அடிப்பதற்கிடையே சுமங்கலிக் கோலம் கொள் (4)
3. ஆனாலும் நரியைப் பரியாக்கியதை இத்தகைய வளர்ச்சி எனக் கூற முடியாது (4)
4. மூன்று சுரங்களுக்கு வெளியே பரு வர நன்றாகச் சாப்பாடு போடுதல் (6)
8. ஒரு நூல் வாசம் கருதி மறுபதிப்பு (6)
11. மயக்கும் பல்லவி பலரைத் தன்வசம் கொண்டது (4)
12. ரத்தம் சிந்தாமலே இப்பூமியைப் பெறலாம்! (4)
15. முடிய ஆரம்பிக்காத துவரை (2)

வாஞ்சிநாதன்
vanchi@chennaionline.com

குறுக்கெழுத்துப்புதிர் விடைகள்

குறுக்காக:5. பாண்டிச்சேரி 6. பலி 7. பதிவேடு 9. மயிரிழை 10. தேவாங்கு 12. செம்புள் 13. தக 14. பரமசிவன்
நெடுக்காக:1. தண் 2. பூச்சூடு 3. பரிணாம 4. உபசரிப்பு 8. திருவாசகம் 11. கும்பல் 12. செம்மண் 15. வரை

© TamilOnline.com