ஆகஸ்டு 2006: வாசகர் கடிதம்
சென்ற மாதம் தென்றலில், சிவன் எழுதிய 'ஸ்வாதி' சிறுகதையை படித்தேன். அது அழகான கதை. அமெரிக்காவில் பிறந்து வளரும் இந்திய சந்ததியினரின் மேற்கத்திய கலாசார தாக்கத்தையும், இந்திய வழியில் வந்த பெற்றோர்களின் மனநிலையையும் வெளிப்படையாக விவரித்திருந்தார். எனக்கு தோன்றியது என்னவென்றால், மனதை மாற்றிக் கொண்டிருக்க வேண்டியது Gary அல்ல, ஸ்வாதி தான். ஏனென்றால், எல்லோரும் Gary போல் இருப்பது சாத்தியமில்லை. என்னுடைய பார்வையில், ஆர்த்தி, ஸ்வாதியைப் பற்றி இன்னும் கவலைப்பட வேண்டும்.

பிருந்தா, டெட்ராய்ட்

தென்றலின் ஜுலை 06 இதழ் கிடைத்தது. பெறும் மாறுதலை கண்டேன். நிதானம், நேர்மை, கடமை கொண்ட திரு. அசோகன் பெயர் காணவில்லை. வருத்தமடைந்தேன். இருக்கட்டும். கையில் இருக்கும் இதழை படிக்கலாம் என ஆரம்பித்தேன். இங்கு இருக்கும் இந்திய அமெரிக்கர்களுக்கு அலுவலக வேலை, வீட்டு வேலை, குழந்தைகள் கவனிப்பு, ஸ்டேஷனரி வாங்கவே அவகாசம் போதவில்லை. எதற்கும் தமிழ் படிக்க வேண்டும், குழந்தைகளுக்கு தமிழ் புகட்ட வேண்டும் என்கிற ஒரே எண்ணத்தில் தென்றல் மாதிரி இருக்கும் பத்திரிகைகளை ஒழிந்த நேரங்களில் படிக்கிறார்கள். அதற்கு தகுந்தாற் போல் பத்திரிகை அமைய வேண்டும்.

அட்லாண்டா ராஜன்

© TamilOnline.com