Dialog
நண்பர் வீட்டு விருந்தில்:

மாமா, நம்ம குட்டிக்கு ஒண்ணுமே தெரியல. எங்கிட்ட வந்து, எட்டுக்கால் பூச்சிக்கு எத்தனை கால்னு கேக்கறான்.? நான் ஆறுன்னு சொன்னா நம்ப மாட்டேங்கறான்.

மாமா: ??!!!

******


Pizza Hutல்:

பேரர்: நீங்க ஆர்டர் பண்ண பிசாவை, எவ்ளோ துண்டாக்கி வரவேண்டும்? எட்டா? பன்னண்டா?

நம்மாளு: எட்டு துண்டாக்கிடுங்க, என்னால் பன்னண்டு சாப்பிடமுடியாது.

பேரர்: !!!!

******


Gas ஸ்டேஷனில்:

மது தன் டோயோட்டா காருக்கு Gas போட்டுக் கொண்டே, "டேய் சிவா, இப்ப எல்லாம், Gas பம்போட கலர கருப்புலேருந்து மாத்தி, 'green' ஆக்கிட்டாம் பாரு.

சிவா: அடப் பாவி, ஒரு மண்ணாங்கட்டியும் மாத்தல. நீ இப்ப போட்டுண்டு இருக்கறது, பெட்ரோல் இல்லடா, 'டீசல்'. தொலஞ்சோம். இன்னிக்கு, 'towing' சர்வீசுக்கு போன் பண்ணு.

மது: ?????!!!

******


பாஞ்சாலி சபதம் நாடக ஒத்திகையின் போது:

டைரக்டர்: பேசாம, துரியோதனனைப் போய் பாஞ்சாலியைக் கூட்டிக்கிட்டு வரச்சொல்லுங்க?

துரியோதனன்: என்ன சார், கதைப்படி துச்சாதனன் தானே, கூட்டிண்டு வரணும்.

டைரக்டர்: அதில்ல. அவங்க வீட்டிலேருந்து... நம்ம ஒத்திகைக்கு கூட்டி வரச்சொன்னேன்பா...

******


ராமன் வீட்டில்:

டேய், சுதா , எங்கப்பாக்கு இண்டெர்னெட்ல நல்ல டீல்ல (Deal) ஹியரிங் எய்டு ஒண்ணு வாங்கினேன். அதோ போட்டுண்டு இருக்கார் பாரு. சூப்பர் க்வாலிட்டி தெரியுமா!.

சுதா: என்ன மாமா, காது இப்ப எப்படி கேக்கறது?

மாமா: நான் சினிமாக்கு வர்ல, நீங்க போயிட்டு வாங்க

சுதா + ராமன்: ???!!!!!!

******


தமிழ் வானொலி நிகழ்ச்சியின் நேயர் ஒருவர்:

"நீங்க பண்ற இந்த நிகழ்ச்சி is ரியலி வெரி nice. இருந்தாலும், என்னோட Request என்னன்னா, இதுல கலந்துக்கற எல்லாரும், maximum, தமிழ்ல பேச try பண்ணனும். அதுக்கு நல்ல Practise பண்ணா, கேக்கற listeners எங்களுக்கு ரொம்ப சந்தோஷமாயிருக்கும்."

பார்வையாளர்களிலிருந்து ஒருவர் "அம்மா நீங்க இப்ப பேசின மாதிரியா?

******


மற்றோரு நேரடி ஒளிபரப்பின் போது:

நேயர் ஒருவருடன் தொலைபேசியில், நிகழ்ச்சியின் தொகுப்பாளர்: ஹலோ யாரு, எங்கேருந்து பேசறீங்க?

நேயர்: நான்தான் 'anonymous' caller சுந்தர் பேசறேன்.

ஸ்ரீகோண்டு

© TamilOnline.com