பிரியா விடை
எண்ணில் நட்பில் இனிய நட்பினள்
பண்பெனும் நட்பில் பாச நட்பினள்
சொல்லியல் நட்பில் தூய நட்பினள்
செல்லியல் நட்பில் செல்லல் நட்பினாள்.

கங்குல் சிரித்த கண்கள் சிரித்து
முத்துச் சிரித்த முகமும் சிரித்து
தந்தம் சிரித்த விரல்கள் சிரித்து
பட்டுச் சிரித்த பதங்கள் சிரித்தாள்.

புதுப்பூ மலர்ந்த கண்கள் மலர்ந்து
பூம்புனல் மலர்ந்த கூந்தல் மலர்ந்து
மேகம் மலர்ந்த மேலடை மலர்ந்து
வேகம் மலர்ந்து விடையும் மலர்ந்தாள்.

பாகீரதி சேஷப்பன்

© TamilOnline.com