ஒரே வார்த்தை இரண்டு அர்த்தம்!
1. குருமாவிற்கானது முள்ளுச்செடி
2. உற்றார் உறவினர் விளையாட்டிற்காகும்
3. ஆணுக்கே உள்ளதை பெண்ணிடம் கேட்பீர்
4. ஆர்வம் கணக்கிலும் உண்டு
5. விவரித்தால் பிரகாசிக்கும்
6. நதிக்கு எதிரே பொறுப்பாகும்
7. பலசரக்கு வியாபாரிக்கானது நம் படுக்கையிலும் உண்டு
8. திசைவாயின் கோளாறு
9. எண்ணைக் கூறினால் பயப்படு
10. நம்பர் கால்வாய்
11. பின்னம் ஒரு அவயவம்
12. ஜகந்நாதன் மசாலாகேட்பான்

விடைகள் :

1. சப்பாத்தி 2. பந்து 3. தாடி 4. பற்று 5. விளக்கு 6. அக்கறை 7. மூட்டை 8. திக்கு 9. அஞ்சு 10. ஆறு 11. காஸ் 12. பூரி

© TamilOnline.com