க்ரிஸ்பி ரைஸ் க்ராக்கர்ஸ்
தேவையான பொருட்கள்

பச்சரிசி மாவு - 1 கிண்ணம்
மைதா மாவு - 1 கிண்ணம் (மைதா மாவை ஆவியில் 5 நிமிடம் வைத்து ஆறிய பின் சலித்து எடுத்துக் கொள்ளவும்)
உளுந்து மாவு - 2டேபிள்ஸ்பூன்
(மாவை சூடாக வறுத்துக் கொள்ளவும்/உளுத்தம் பருப்பை சிவக்க வறுத்து (எண்ணெய் விடாமல்) மிக்ஸியில் அரைத்து வைத்துக் கொண்டால் அவ்வப்போது உபயோகிக்கலாம்)
நெய் அல்லது எண்ணெய் - 2டேபிள்ஸ்பூன்
உப்பு, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் - ருசிக்கேற்ப
சமையல் எண்ணெய் - பொறித்தெடுக்க தேவையான அளவு

செய்முறை

அரிசி மாவு, மைதா மாவு, உளுந்து மாவு, உப்பு, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் எல்லாவற் றையும் ஒரு பாத்திரத்தில் நன்றாக கலந்து, நெய் அல்லது எண்ணெயை சூடாக்கி மாவுடன் கலக்கவும்.

பின்னர் தேவையான அளவு மிதமான சுடுநீரை விட்டு, மாவைப் பந்துபோல பிசையவும்.

இந்தக் கலவையை உதிர்த்தால் உதிரும் பதத்துக்கு இருக்க வேண்டும்.

ஒரு பாலிதீன் தாளில் சிறிது எண்ணெய் தடவி மாவை சிறு உருண்டைகளாக்கி சிறு வட்டவடிவில் தட்டி, மிதமான சூட்டில் எண்ணெய்யில் பொன்நிறமாக பொரித்து எடுக்கவும்.

க்ரிஸ்பி ரைஸ் க்ராக்கர்ஸ் ரெடி

வைதேகி திருமலை

© TamilOnline.com