பொழுது போக்கு இணையத்தளம்!
இலண்டனை மையமாகக் கொண்டு வெளி வந்து கொண்டிருக்கும் நிலாச்சாரல் டாட் காம் (www.nilacharal.com) தமிழில் சில புதிய முயற்சிகளை மேற்கொள்ள இப்போதுதான் தன்னைத் தயார் செய்து கொண்டிருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.

தமிழில் வெளியாகும் மற்ற இணையத் தளங்களைப் போன்றே இந்த இணையத் தளத்திலும் கதை, கவிதை, கட்டுரை, சினிமா எனத் தலைப்புகள் நீள்கின்றன. ஆங்கிலம், தமிழ் இரண்டும் கலந்த கலவையாக இந்த இணையத் தளம் வெளிவந்து கொண்டிருக்கிறது.

வெளிநாடுவாழ் தமிழர்கள் பலரின் படைப்பு களையும் தேடியலைந்து வாங்கிப் பிரசுரித் திருப்பது இந்த இணையத்தளத்தின் சிறப் பம்சம்!

இந்த இணையத்தளத்தில் உங்களது பெய ரைப் பதிவு செய்து விட்டால் போதும், எப்போதெல்லாம் புதிய பகுதிகளை இடம் பெறச் செய்கிறார்களோ அப்போதெல்லாம் உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பி உங்களுக்கு நியாபகப்படுத்துவார்கள்.

இளம் சாதனையாளர்களைக் கௌரவிக்கும் விதமாக அவர்களுக்கென்றே ஒரு பக்கம் ஒதுக்கி, அதில் அவர்களின் இலட்சியம், சாதனைகள் பற்றியெல்லாம் பகிர்ந்து கொள்ள வாய்ப்பளித்திருப்பதும் சிறப்பம்சம். உலகம், கொண்டாட்டம், அரங்கம்... என வித்தியாச மான தலைப்புகள் பார்வையாளர்களைச் சுண்டியிழுக்கும் என்று நம்பலாம்! சினிமா நேர்முகம், வளர்பிறை, குழந்தைகள் பக்கம் என பார்வையாளர்களை வசீகரிக்கும் பக்கங்களும் நிரம்பியிருக்கின்றன. பொழுது போக்க விரும்புவர்கள் கண்டிப்பாக இந்த இணையத் தளத்தைப் பார்வையிடலாம்!

பார்வையிட விரும்புபவர்கள் www.nilacharal.com என்ற இணைய முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

நிலாச்சாரல் இணையத்தளத்திலிருந்து...

இனியொரு விதி செய்வோம்

சாற்றை உறிஞ்சி சக்கையை எறிவது கரும் பிற்கு மட்டும் அன்று களிப்புடன் கொண்டாடப் படும் பல்வேறு தினங்களுக்கும் பொருந்தும். செய்கிறோமா என்பதே கேள்வி. தீபாவளி, கிருஸ்துமஸ், ரமலான் போன்ற தினங்கள் மதச்சார்பானவை. அன்றாடம் நடக்கும் அசுர வாழ்க்கையில், இவை தவிர வேறு சில தினங்களை நாம் கொண்டாடத் துவங்கியுள் ளோம். தினமும் இடம்பெறும் இயந்திர வாழ்க்கை நிகழ்ச்சிகளில் சலிப்புற்ற மனங் களைக் களிப்புறச் செய்யவே இவை அமைக்கப் பெற்றன. அதுவும் இந்தியாவில் இந்த மதச் சார்பற்ற தினங்கள் எண்ணிக்கையில் மேலும் கூடுதல் ஒரு வரவேற்கத்தக்க மாற்றம்.

மகளிர் தினமும் இவற்றில் ஒன்று. முதல் உலக மகளிர் தினம் ஜெர்மனியில் மார்ச் 19,1911-இல் கொண்டாடப்பட்டது. இதில் ஜெர்மனி, ஆஸ்திரியா மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் பங்கேற்றன. இந்த நிகழ்ச்சியை வழிநடத்தியவர் ரஷ்யாவைச் சேர்ந்த அலக்சாண்ட்ரா கொ லொண்டாய் என்றும் அம்மணி. அவர் தன்னுடைய அறிக்கையில், "இந்தத் தினம் மிகவும் சிறப்பாகச் சிறிய கிராமங்கள் முதற் கொண்டு பல இடங்களில் கொண்டாடப் பட்டது. உலகின் பல இடங்களில் கணவன் மார்கள் தங்கள் பிள்ளைகளைப் பார்த்துக் கொள்ள, மனைவிகள் அனைவரும் ஒன்றுகூடி நடத்திய முதல் கூட்டம்" என்று கூறுகிறார்.

மௌன விளையாட்டு

இரண்டு வருடமாய் நடக்கிறது இந்தப் போராட்டம்

நான் சொல்வேன் என நீயும்
நீ சொல்வாய் என நானும்
காத்துக் கிடக்கிறோம்
ஒருவருக்கொருவராய்
கடிதமோ, வாழ்த்து அட்டையோ
கவிதை வசனமோ
சொல்லிவிட முடியாது.
புரிதலில் புன்னகைக்கிறோம்
அறிந்து கொண்டு மனசுள் அழுகிறோம்
விலகி நின்றாலும் விலகாமல்
பக்கத்திலென்றாலும் படாமல்
நாம் நடத்தும் விபரீத நாடகம்
இன்னும் நடந்து கொண்டுதானிருக்கிறது.
எப்போது சொல்லிக் கொள்வோம்
என்று தெரியாமல்
தெரிந்து கொள்ளவும் விரும்பாமல்...
இது என்ன விஷப் பரிட்சையா?
இல்லை விளையாட்டா?
ஒரமெல்லாம் அலையின் ஆர்ப்பாட்டம்தான்
ஆனாலும் அடிக்கடலின் அமைதி-ஆனந்தம்
அவசரமாய்க் கொட்டிவிட வேண்டாம்
இந்த மௌன விளையாட்டு
இன்னும் கொஞ்ச காலத்திற்கு
வேண்டுமாய்த் தானிருக்கிறது.

சங்கர்நாக்

‘பாபா’ பட பஞ்ச் டயலாக்குகள் சில...

தவறு செய்யாத மனுஷன் இல்ல. அதே தவறை திரும்பச் செய்றவன் மனுசனே இல்ல!

நான் வரவேண்டிய நேரம் வந்திடுச்சி நீ போக வேண்டிய நேரம் நெருங்கிடிச்சி!

நான் ஒதுங்கினா ஒன்பது அர்த்தம் இருக்கும். இறங்கினா எண்பது அர்த்தம் இருக்கும்!

பெத்த தாய்க்குக் கஞ்சி ஊத்தாத மகன் ஆம்பள இல்ல. பெத்த புள்ளைய படிக்க வைக்காத தாய் பொம்பள இல்ல!

அன்னைக்கு சொன்னதுதான் இன்னைக்கும். இன்னைக்கு சொல்றதுதான் என்னைக்கும்!

நான் சொல்லிட்டு யோசிக்கிறவன் இல்ல யோசிச்சிட்டு சொல்றவன்!

பாம் போட்டாதான் வெடிக்கும். பாபா சொன்னாலே வெடிக்கும்

பகவானைக் கும்பிடு பாபாவை நம்பிடு.

அசந்தா அடிக்கிறது மத்தவங்க பாலிஸி அசராம அடிக்கிறது என்னோட பாலிஸி

நீயே சம்பாதிச்சா வருமானம். மத்தவன் சம்பாதிச்சு உனக்குக் கொடுத்தா அவமானம்!

இந்த பாபா தப்பு பண்ணிய ஐந்தாவது நிமிஷத்திலேயே தண்டிப்பான்.

சரவணன்

© TamilOnline.com