சீரக ரசம்
தேவையான பொருட்கள்

புளி - சிறு எலுமிச்சை அளவு
தக்காளி - 1
சீரகம் - 2 ஸ்பூன்
துவரம்பருப்பு - 1 ஸ்பூன்
தனியா - 1 ஸ்பூன்
தேங்காய் தூள் - 1ஸ்பூன்
மிளகாய் வற்றல் - 2
கருவேப்பிலை - சிறிதளவு
கடுகு - 1 ஸ்பூன்
உப்பு - தேவையானது

செய்முறை

புளி, தக்காளி, இவற்றை வெந்நீரில் ஊற வைத்து நன்றாக கரைத்து ஈயச் செம்பில் விடவும். உப்பு சேர்த்து புளிவாசனை போக 5 நிமிடங்கள் கொதிக்க விடவும். மிளகாய் வற்றல், சீரகம், தனியா, துவரம் பருப்பு, தேங்காய் தூள், கருவேப்பிலை இவற்றை மிக்ஸ்யில் அரைத்து கொதிக்கும் ரசத்தில் விட்டு தேவையான நீர் சேர்த்து பொங்கி நுரைத்து வரும் போது கீழே இறக்கவும். நெய்யில் கடுகு தாளிக்கவும்.

இரண்டாம் வகை

இதற்கு புளி மட்டும் கரைத்துவிட்டால் போதுமானது. தக்காளி அவசியமில்லை. சீரகம், இஞ்சி, கருவேப்பிலை இவற்றை அரைத்துவிட்டு பொங்கி நுரை வந்ததும் கடுகு தாளிக்கவும். குறிப்பு: சீரகம் அரைத்து விட்ட பிறகு ரசம் கொதிக்கக் கூடாது. கொதித்தால் மருந்து வாசனை வந்துவிடும்.

இந்திரா காசிநாதன், உமா நடராஜன்

© TamilOnline.com